பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

103


கொட்டி வாழ்க்கைக் குடைச்சலோடு தேம்பித் தேம்பி அழுதபடியே இருந்தார்.

ஆனால், பால் எர்லிக், 'கிருமிகளுக்குச் சாயம் போட்டே அவற்றை எல்லாம் அழித்து விடுகிறேன் பார்' என்று மனைவிக்குச் சமாதான்ம் கூறியபடியே ஆடாமல்-அசையாமல் பணிபுரிந்து வந்தார்.

‘சாயம் போட்டால் கிருமிகள் அழியுமா? இதென்னடா அதிசயம் வேடிக்கையாக இருக்கிறதே இந்த டாக்டரின் செப்படி வித்தை' என்று அவரது சமாதான்த்தைக் கேட்ட மனைவி பொரிவாள்! படபடப்பாள்! முனு முனுப்பாள்!

"மனித உடலில் ஊறு விளைவிக்காமல் பல கோடி நோய்களை உருவாக்கும் இந்தக் கிருமிகளை அழித்துக் காட்டுகிறேன் பார் அதற்கான ரசாயன சாயப் பொருட்களைத் தயாரிக்கிறேன்” என்று டாக்டர் பால் எர்லிக் தன்னைப் பற்றி விமரிசனம் புரிவோர்க்கு பதில் கூறியபடியே இருந்தார். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை என்பதை விட எவரும் மதிக்கவில்லை என்றே கூறலாம்.

அதை விடச் சிறப்பு என்னவென்றால், டாக்டர் பால் எர்லிக்கை யாரும் ஒரு மனிதனாகவே மதிக்காமல், கிருமிக் கிறுக்கன், பூச்சிப் பித்தன், சாயக் கோமாளி என்றெல்லாம் வசை பாடியபடியே இருந்தார்கள்.

தனது மனைவியின் அலங்கோல வாழ்க்கை வனப்புமிகும் அவளது வாலிபத் திருமேனி வயோதிகத்தை வளைத்துப் பிடித்து விட்டதைப் போன்ற தளர்ச்சி.