பக்கம்:விடிவெள்ளி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் தி மன்னரின் தலைநகராய் விளங்கிய அழகு நகரம் காரிருளில் ஆழ்ந்து பொலிவிழந்து நின்றது. இயற்கை இருள் மட்டுமல்ல; இதர இருள் பண்புகள் பலவும் கரும் போர்லையாய் மூடி மறைத்துவிட்டன. அந் நகரின் உயர்வை, நீரிலே தவழ்ந்து, நெருப்பிலே நின்று' மன்னர் மடியிலே வளர்ந்து, அறிஞர் நெஞ்சிலே வீற்றுச் சிறப்புற்று உயர்ந்த தமிழ், தனது தாயகத்திலேயே, வீட்டுக்கு வேண்டாத மருமகள் போல ஒதுங்கி ஒடுங்கிக் கிடக்க வேண்டிய நிலை பெற்றிருந்தது. சைவம் மணம் பரப்பிய மதுராபுரியிலே சமணம் தலை ஆாக்கி ஆடியது தமிழ்க் கலையும், தமிழர் நாகரிகமும், சிறந்த மனிதப் பண்புகள் பலவும் சிதைத்து சீர்கெட்டுக் கிடந்தன. அறச்செயல்கள் அழிந்துவிட்டன. அறிஞ் செய்ய ஆசை கொண்டோர்கூட அஞ்சி நடுங்கிப் பதுங்கி வாழ நேர்ந்த காலம் அது. சில நூறு வருடங்களிலேயே களப்பிரர்கள் தமிழின் மேன்மையைச் சிதைத்து, தமிழரின் வீரத்தையும் பெருமை கயையும் ஒடுக்கி, நாட்டின் மாண் பைச் சீரழித்து விட் டார்கள். சோழ நாட்டைப் பிடித்த வியாதி பாண்டி நாட் டையும் தொற்றியது. களப்பிராகள் சோமநாட்டில் தங்கள் தலைநகரை அமைத்திருந்தபோதிலும், கொடிய வர்களான அவர்களது சக்திகள் மதுரையிலும்பேயாட்டம் போட மலில்லை. பாண்டி நாட் டின் இதர பகுதிகளிலும் :த்த ஆட்சியின் விஷக்கரங்கள் மீண்டும் திடீர் திடீ தொல்லை தருவதும் இயல்பாக இருந்தது...... பகலிலேயே பாழடைந்த நகரம்போல் தோன்றிய மதுரை இரவு நேரங்களில் அச்சம் தரக்கூடியதாய் வினங் கியது. வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/10&oldid=905838" இலிருந்து மீள்விக்கப்பட்டது