பக்கம்:விடிவெள்ளி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ல்விக்கண்ணன் 99 லாமே என்று எண்ணினான். துறவியை முன்னே செல்ல விட்டுப் பின்னே மெதுவாக நடத்தான். - 荔 بیچ چی بنام " و " و تهران . (ی iš مسجي ام بی بی ۹ به rمي துறவி வீதித்திருப்பம் ஒன்றில் திரும்புவது தெரிந்தது இளம்வழுதியும் வேகமாக நடந்து, அங்கு திரும்பினான். ஆனால் முன்சென்ற துறவி மயமாக மறைந்து விட்டது போல் தோன்றியது! "அவன் அப்படி எங்கு மறைந்திருப்பான்' என்ற சந்தேகம் வழுதிக்கு எழுந்தது. ஒன்றும் தெளிவாக வழி யில்லை. இனி எத்திசை செல்வது என்று தீர்மானிக்க இயலாதவனாய் அவன் அவ்விடத்திலேயே தின் தான். தேரேமுன்சென்றால் வரகுணத்தேவரின் மாளிகையை அடையலாம். அங்கே செல்வது ஆபத்து என்று அவன் மனம் எச்சரித்தது அந்த இடத்திலேயே நிதிபதுகூட ஆபத்துதான் என்று அவனுடைய உள்ளுணர்வு கூறியது. வந்த வழியே திரும்பிந.ந்து பூங்குடி ஆச்சி வீடு சேர்ந்து, சாத்தனின் வருகைக்காகக் காத்திருப்பதே அறிவுடைமை யாகும் எனத் தீர்மானித்தான் அவன். ஆனால், அவன் நினைத்தது நடைபெற வழியில்லாமல் போயிற்று. அந்தி உலா கிளம்பியிருந்த குடிகாரக் களப்பிரர்கள் சிலர் அவ்வழியே வந்தார்கள். அவன் விலகி வழி விடாமல் நடுப்பாதையில் நிற்பதைக் கண்டு வெகுண்டார்கள். ஒருவன் அவனை அதட்டி வசை பாடவும் இளம்வழுதி கோபம் கொண்டு அவன் முகத்தில் ஓங்கி அறைத்தான். மற்றவர்கள் வழுதியைச் சூழ்ந்துகொண்டார்கள். இளம்வழுதி தீரமாகப் போராடினான். ஆயினும், அவர்கள் பலர். அவர்களிடையே அவன் தாக்குதலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/100&oldid=905840" இலிருந்து மீள்விக்கப்பட்டது