பக்கம்:விடிவெள்ளி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 0 108 தெரிந்தால் தானே!... அவர்களுக்கு ஏன் தேசிய வேண்டும்?' என்று கேட்டாள் அவள். நீ வாயைத் திறவாமலிரு அது போதும். நான் சொல்ல மாட்டேன். இவரை இப்படியே நடுத்தெருவில் போட்டுவிட்டுச் சென்றால் என்ன ஆவது திரும்பவும் வெறியர்கள் வரு வார்கள். முன்பு தாக்கியவர்களோ, அல்லது வேறு குடி யர்களோ வரலாம் வந்து இவரைக் கொன்றுவிடுவார்கள். அதுதான் நடக்க வேண்டும். அதுவே நல்ல ஏற்பாடு என்பதுதான் உன் எண்ணம் ?? - 'இல்லை அம்மா உங்கள் விருப்பம் போலவே செய யுங்கள்!' என்றான் அவன். வண்டி அவசரமற்ற கதியிலே சென்று கொண்டு தானிருந்தது இப்பொழுது வண்டி ஒட்டி வந்தவன் வழக்கமாகத் தேவரோடு செல்கிறவன் அல்ல.வீர புத்திரன் என்ற அந்த வேலையாளாக இருந்திருத்தால், இளம் வழுதியை உடனே இனம் கண்டு கொண்டு, வண்டியை விலக்கிச் சென்றிருப்பான் முந்திய நான் இரவில் வண்டியை மறித்து வம்பு செய்தவனை-தேவரிடம் எதிர்த்து பேசியவனை-விளக்கொளியில் அவன் நன்றாகக் கவனித்கிருந்தான். இவனோ தேவரிடம் பயம் கொண் டிருத்த போதிலும், தேவர் மகளிடம் ஒருவித பக்தியே செலுத்தினான் என்று சொல்லலாம் எனவே இவன் திலகவதியின் சொல்லத் தட்டி நடக்கவே மாட்டான்: அம்மா, வண்டியை எங்கே கொண்டு போக?' என்று விசாரித்தான் வண்டிக்காரன். - விஷ்ணுசிம்மன் மனைவி பூங்குழலியைப் பார்ப்பதற் காகத்தான் திலகவதி கிளம்பியிருந்தாள். களப்பிரனான விஷ்ணுசிம்மன் மதுரை மாதகரில் சிறப்புடன் வாழ்க்கை நடததிய வணிகன் ஒருவனின் மகளை மணம் புரிந்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/104&oldid=905847" இலிருந்து மீள்விக்கப்பட்டது