பக்கம்:விடிவெள்ளி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 105 விசேஷ சிரத்தையோடு தயாரித்திருந்த மதுரபானம் அவளிடமிருந்தது. திலகவதி சிறிதும் தயங்காமல் அதை எடுத்து: ஒரு தாயின் பரிவோடு, அவன் வாயில் மெதுவாக ஊற்றினாள். அவன் முகத்தில் தெளிவு பிறப்பதைக் கண்டதும் அவன் உள்ளம் ஆனந்தம் கொண்டது. - வண்டி மாஞ்சோலை இல்லம் சேர்வதற்கு வெகு தேரம் பிடிக்கவில்லை, வரகுணத்தேவருக்கு வசதியான வீடுகள் பல இருந்தன. அவற்றில் மாஞ்சோலை இல்லம்’ தனித்தன்மை உடையது ஊரை விட்டு ஒதுங்கி, ஆற்றங் கரை அருகில், நன்கு வளர்ந்து நின்ற மாமரங்களின் நடுவில் அமைந்திருந்தது அது கோடை காலத்தில் பகல் பொழுது களைப் போக்குவதற்காகத்தேவர் அங்கு வருவது உண்டு. இதர காலங்களில் எல்லாம் அநேகமாக அந்த இல்லம் அடைபட்டே கிடக்கும் ஆயினும் அதைப்பாதுசாக்கவும் வசதிகள் குறையாதபடி கவனித்துக் கொள்ளவும் தேவையான பணியாட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இளம்வழுதி ஒய்வு பெறுவதற்கு ஏற்ற இடம் அதுவே என்று திலகவதி அதனால்தான் தீர்மானம் செய்தாள் நன்றாக இருட்டிய வேளையில் தான் வண்டி அந்த இடத்தை அடைந்தது. இதுவும் நல்லதுக்குத் தான். யாரும் சந்தேகம் கொள்ள இடமிராது' என்று திலகம் கருதனாள். இளம்வழுதியை மெதுவாக எடுத்து வரச் செய்து, செளகரியமான படுக்கை மீது படுக்கவைத்து. விளக்கு வெளிச்சத்தில் அவனை நன்றாக ஆராய்ந்தாள் அவள். அவனுக்கு பலத்த காயம் எதுவுமில்லை அங்குமிங்கும் கத்திகள் சிறிது கீறியிருந்தன. ஆழமான வெட்டு ஒன்று மில்லை. நெற்றியில்தான் அடி சிறிதே அழுத்தமாகப்பட் டிருக்கவேண்டும். அஞ்சுவதற்கேதுமில்லை என்ற உணர்வு அவள் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/106&oldid=905851" இலிருந்து மீள்விக்கப்பட்டது