பக்கம்:விடிவெள்ளி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3 197 'முன்பு உங்களுக்கு அறிமுகமான நிலையம் அல்ல இது மாஞ்சோலை இல்லம் என்கிற ஆற்றங்கரை வீடு இது. இங்கே என் தந்தைவரமாட்டார். நீங்கள் அலட்டிக் கொள்ளாமல் ஓய்வு பெறுவதே நலம் தரும் என்று திலகவதி அன்புடன் மொழிந்த ள். அவள் கூற்றில் நம்பிக்கை கொண்ட வழுதி அமைதி யாக அமர்ந்தான். நான் இங்கே எப்படி வந்தேன்' என்றான். அவள் நடந்ததைச் சொன்னாள் . 'நீங்கள் தெய்வம் உங்கள் தந்தையின் எதிரி என அறிந்தும் கூட நீங்கள் என்னை இரண்டு தடவைகள் காப்பாற்றி விட்டீர்கள்... நன்றிப் பெருக்குடன், உணர்ச்சித் துடிப்போடு, பேச வினோன் அவன் - அவன் தனது உணர்வுக் குழப்பத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக உரைத்தாள்: நான் சாதாரண மான பெண் தான். மனித் இதயம் பெற்ற யாரும் செய் யக் கூடியதைத் தானே நானும் செய்தேன்? 'இருந்தாலும், உங்கள் கருணை உள்ளம் மிகவும் புனிதமானது, உயர்ந்தது என்றே நான் மதிக்கிறேன். உங்களுக்கு என் நன்றியை..." அவள் வேகமாய் குறுக்கிட்டாள். நீங்கள் பேசா மவிருங்கள். அமைதியாக இருப்பதே நல்லது 'எனக்கு இப்போது ஒன்றுமில்லை என்று அவன் மீண்டும் சொன்னான். நான் எதிர்பாராத வேளையில் வெறியர்கள் பலர் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள், நான் வெறுங்கையனாக நின்றேன். இல்லையெனில், அவர்களில் ஒரிருவரையாவது வீழ்த்தியிருப்பேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/108&oldid=905855" இலிருந்து மீள்விக்கப்பட்டது