பக்கம்:விடிவெள்ளி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 195 "தலைநகரில் மட்டும் அச்சத்தை விதைப்பது போதாது. என்று கூற்றன் நாயனார் கருதிவிட்டதாகத் தெரிகிறது. உள்நாடுகளிலும் கூற்றங்களிலும் களப்பிரரின் உண்மை ஆற்றலை மீண்டும் எடுத்துக்காட்டி, தங்கள் ஆட்சி நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வீரர்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றிருக்கிறார்கள்..." 'ஒ' என்றான் வழுதி, மறுபடியும். இன்றுஅதிகாலை யில் குதிரை வீரர்கள் செல்வதையும் நான் கண்டேன். இதற்காகத்தானா?” அவன் உள்ளம் கொதிப்படைத்தது. நாட்டுமக்களை பிள்ளைப்பூச்சிகளாக மாற்றிவிட்டார்கள் இவ்வெறியர் கள். தலை துர்க்கவும் அஞ்சுகிற பொட்டுப் பூச்சிகளாக மாற்றிவிட்டது போதாதென்றோ, அவர்களை மண் னோடு மண் னாகத் தேய்ந்துவிடத் திட்டமிடுகிறார்கள் இவ்வீணர்கள்?..." - - அவசரமாகக் குறுக்கிட்டாள் திலகவதி பொறுமை யோடு இருங்கள்: ஆத்திரம் அடை, வது உங்களுக்கே தீமை உண்டாக்கும்...' 'உண்மை, அன்னை மங்கையர்க்கரசி எனக்கு அ வுறுத்தியதை நான் அடிக்கடி மறந்துவிடுகிறேன்’ என் து முனங்கினான் அவன். மங்கையர்க்கரசியா!' என வியப்புற்றாள் திலகம், "ஆமாம், தமிழகத்து ஆண்கள் வீரமிழந்து உணர் வற்றவர்களாய் மாறிவிட்டார்கள். ஆயினும் தமிழ்ப் பெண்கள் அன்பையும், அருள்நோக்கையும் மனத்திண்மை யையும் இழந்து விட வில்லை என்பதை எனக்குஉணர்த்திய என் தாய்க்கு அடுத்த அன்னை மங்கையர்க்கரசிப் பிராட்டி' என்று நன்றி பெருகும் குரலில் உணர்வு துடிக்கப் பேசினான். வழுதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/110&oldid=905861" இலிருந்து மீள்விக்கப்பட்டது