பக்கம்:விடிவெள்ளி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ) விடி வெள்ளி இந்நகரத்தின் பிராட்டியாரையா குறிப்பிடுகிறீர்கள்? அவர்களை உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று வின் வினான் அவள், அவன் சொன்னான் தொடர்ந்து, அதே உண்மையை எனக்கு மீண்டும் வலியுறுத்தி விளக்கும் தெய்வம் நீங்கள்..." - என்னைத் தெய்வம் என்று சொல்ல வேண்டாம் என்று தான் கேட்டுக்கொள்ளவில்லையா? வேதனை ஒலித்தது அவள் குரவில், - "அப்படியானால் அன்னையாகவே உங்களையும் மதிக் கிஆேன் எனக்கு உதவிய அன்னையின் பெயரை நான் அறிய வேண்டாமா?...' இளம்வழுதி தன்போக்கில் பேசிக் கொண்டிராமல், அவள் முகத்தைக் கலனித்திருந்தால் திலகவதியின் துயரம் அங்கு சூழ்ந்ததைப் புரிந்திருக்கலாம். கருநிறத்தவளான அந்த இனம்பெண்ணின் முகத்திலே கூட இரத்தம் வேக மாகப் பாய்ந்து ஒரு மாறுதலை ஏற்படுத்தியதை அவன் கி.ணர முடிந்திருக்கும். அவன் சொல், அவள் இதயத்தில் த்தது என்பதை அவள் முகம் எடுத்துக் காட்டியது: உள் ளத்தில் தோன்றிய ஒரு ஏக்கத்தின் நிழல் அவள் விழி களில் ஆடியது. திலகம் பெருமூச்செறிந்தாள். திலகவதி' என்று முனங்கினாள். 'அம்மா, உங்களை நான் என்றும் மறக்க முடியாது. வருகிறேன். என்று கூறி, கை கூப்பி வணங்கிவிட்டு அவன் வேகமாக வெளியேறினான். - தனது உள்ளத்தை உணர்ந்து கொள்ளவில்லையே அவன் என்ற ஏக்கத்தோடு, வேதனையோடு, குழப்பத் தே டு நின்ற திலகவதிக்கு அவனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றே தோன்றவில்லை; முதவில் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/111&oldid=905863" இலிருந்து மீள்விக்கப்பட்டது