பக்கம்:விடிவெள்ளி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் D 111 இருளில் மறைந்து சிறிது நேரமான பிறகே தன் தவறை உணர்ந்தாள் அவள். f 'அட அடா ! இரவு வேளைகளில் எவரும் வீதிகளில் தலைகாட்டக் கூட. து; ஆணை மீறி நடக்கத் தனிகிற வர்கள் உடனடியாகக் கொல்லப்படுவர் என்றும் கூந்தன் நாயனார் அறிவித்திருக்கிறாரே! அதை நான் இவரிடம் தெரிவிக்க மந்த்து போனேனே !’ என அங்கலாய்த்தாள் திலகம், தன் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றான், 'அம்மா!' என்ற அழைப்பு அவளைத் திடுக்கிடச் செய் தது. இணம்வழுதிதான் திரும்பி வருகிறானோ என்ற ஆவ லோடு கவனித்தாள். - ஆனால், வண்டிக்காரன் தான் எட்டிப் பார்த்தான். நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் விடுபோய் சேராவிட்டால், ஐயா ..." அவனை மேலே பேசவிடவில்லை அவன். "4th, αξ என்று கூறி வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டி வேகமாகவே போகட் டும்' என்று உத்தரவிட்ட பிறகு அவள் வேறு பேசவேயில்லை; தனது எண்ணங்க ளோடு குழம்பிக் குவிந்தாள் 12. இருளோடு இருளாய்! திலகவதியின் மூலம் அறிந்த செய்திகளால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொதிப்பு குறையாதவனாய் இளம்வழுதி வேகமாக நடந்தர்ன். மாஞ்சோலையை விட்டு வெளி யேறி ஆற்றங்கரை ஓரமாகவே சென்றான் அவன். அப்பொழுது உலகை இருள் கரிய திரை கொண்டு போர்த்தியிருந்த போதிலும், வானவெளியில், பூத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/112&oldid=905865" இலிருந்து மீள்விக்கப்பட்டது