பக்கம்:விடிவெள்ளி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விடிவெள்ளி கவனிப்பது போல் படவும் இளம்வழுதி தயங்கினான். நல்ல வேளையாக அகுகிலேயே ஓங்கி வளர்ந்த மருத மரம் ஒன்று நின்றது. அதன்பின் பதுங்கினான். அவன் தான் வருவதைத் துறவி உணர்ந்து கொண்டானோ என்ற பதைப்பு அவனுக்கு உண்டாயிற்று. அது வீண் திகில்தான். துறவி இயல்பான எச் சரிக்கை நோக்குடன் நின்று நிதானித்துவிட்டு முக்கிய திருப்பத்தில் அடி எடுத்து வைக்கிறான் என்பதை வழுதி உடனடியாக அறிய முடிந்தது. மீண்டும் காலம் கடத்தா மல் தொடர்ந்து நடந்தான் அவன். மாங்கள் அதிகமாக இல்லாத பகுதி வழியாகவும், உடை-கருவேல் போன்ற முன் மரங்கள் ஓங்கி வளராமல் புதன் புதராக அங்கொன்றும் இங்கொன்றும் தலை விரித்து நின்ற வெளிகளினுாடும் துறவி நடிந்தான். அவன் அடிக்கடி போய் வந்து பழக்கப்பட்ட பாதையாகத்திான் இருக்க வேண்டும் அது. ஏனெனில், காலில் முள் தைத்து விடுமே என்ற பயமோ வேறு எவ்வித ஐயமோ ஒர் சிறி தும் இல்லாதவன ப் நிமிர்ந்த தனயோடு முன் சென்று அவனைப் பின்பற்றி நடந்த இளம்வழுதி அதிகமான எச்சரிக்கையோடு போக வேண்டியிருந்தது. சில இடங் களில் கூரிய முட்கள் கிடந்து, அவன் பாதங்களை நலம் விசாரித்தன: குத்திய முட்களை எடுத்தெறிந்து விட்டு வேதனையையும் பொறுத்துக் கொண்டு அவன் தொடர் வத்ற்குள் துறவி பார்வைப் புலனில் படாது முன்னேறி பான். ஆகவே வழுதி வேகமாக நடக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவற்றை எல்லாம் பெரிது படுத் தாமல் அவன் தொடர்ந்தான். பாழடைந்த கோவில் ஒன்று தென்பட்டது. துறவி அத்இள் புகுந்து மறைந்தான், இளம்வழுதி கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/115&oldid=905870" இலிருந்து மீள்விக்கப்பட்டது