பக்கம்:விடிவெள்ளி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 118 அருகே வந்து பார்த்தபோது, பெரிய கதவு ல்ெகு சுலப மாகவே திறக்கப்படாததுபோல்நெடிதுயர்ந்து அசையாது நின்றது. வழுதி கையினால் தடவினான் நெடுங்கதவின் ஒர் புறத்தில் திட்டி வாசல் அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். அதன் கதவும் இறுகச் சாத்தி உள்ளே தாழிடப்பட்டிருந்தது. இதன் வழியே தான் துறவி உள்ளே சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான் அவன், தானும் உள்ளே நுழைய வேண்டும் என்று இளம் வழுதி எண்ணினான். இல்லாவிடில் இவ்வளவு தூரம் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு. துறவியைப் பின் தொடர்ந்து வந்து என்ன பயன்? நேர்வழியில் உள்ளே புகமுடியாது என அறிந்த வழுதி மதில் சுவர்களைச்சுற்றி வந்தான். - உயர்ந்து நின்ற சுவர்கள் மீது ஏறுவதற்கு வசதி எதுவும் இருந்ததாகத்தெரியவில்லை. கால் பதிப்பதற்கோ, கையால் பற்றிக் கொள்வதற்கோ சிறு பள்ளமுமில்லை, பிடிப்புமில்லை என்றே அவன் கருதினான் எனினும், கோயிலின் பின் புறத்தில் சில மரங்கள் நின்றன. அவற் தில் சில நன்கு வளர்ந்து, பெரிய கிளைகள் பரப்பி, அடர்த்தியாகக் காட்சி அளித்தன. சில கிளைகள் இல் சுவர் மீதும் படிந்திருத்தன. - 4. வழுதி ஒரு மரத்தில் ஏறி கிளை வழியே நடந்து, ம்திலை அடைந்தான். மெதுவாக மதில் மீது நடந்தான். அவன் கண்கள் வழியையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கோயிலின் உட்புறத்தில் என் தென்படும் என்றும் ஆராய்ந்தாக வேண்டும். ஆகையால் அவன் வெகு எச்சரிக்கையோடுதான் செயல்புரிந்தான் உள் மண்டபம் ஒன்றிலிருந்து பேச்சுக்குரல்கள் எழு வது அவன் காதுகளில் விழுந்தன. அடியார்க்கு நல்லான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/116&oldid=905872" இலிருந்து மீள்விக்கப்பட்டது