பக்கம்:விடிவெள்ளி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 117 அறிவு கொளுத்த வேண்டியது அவசியம் என்பதை நாம் உணர்ந்தும் வெகு காலமாகிவிட்டது எவ்வழியில் அதை நிறைவேற்றுவது என்றுதான் இன்னும் நம்மால் முடிவு செய்ய இயலவில்லை...' - நம் மதம் தழுவி: தாரை ஒழித்துக் கட்டுவோம்’ 'நெருப்பிலே தன்ஞவோம் கழுவில் ஏற்றுவோம்’ கொல்லுவோம்: לי வெறிக் கூச்சல்கள் கனமாக மேலெழுந்தன. மீண்டும் அமைதியாயிருங்கள்!' என்ற கட்டனை பிறந்தது, 'நமசிவாய நமசிவாய' என்றது ஒரு குரல் அதைப் பல குரல்கள் முனங்கின ந தன் தாள வாழ்க!" என்ற தலைமைக்குரல். அதை ஓங்கி உச்சரித்தன இணைக் குரல்கள். - அடியார்க்கு நல்லான் திரும்பவும் பேச்செடுத்தான்: "நாம் அறுதியிட்டு வகுக்கப் போகின்ற திட்டம், கூற்றன் நாயனார்க்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் கூற்றம் ஆகவே அமையும். பிறவ: யாக்கைப் பெரியோனா கிய நம் இறைவ ைப் பழித்து வந்தவர்களின் நாக்கு களைக் கூர்வாளினால் அறுத்தெரியவும் இசைவேன் யான். ஆயினும், எதற்கும் உரிய வேளை வரவேண்டும்...' கசடர்களைக் கழுவில் ஏற்றக் காலமும் வேண்டுமோ எனக் கடாவுகின்றேன்" என இடிக்குரல் ஒன்று உறுமியது. - 'இவ்வளவு செவிமடுத்ததே போதும் போதும்: என்றாகிவிட்டது இளம்வழுதிக்கு. சமயப்பற்று மிகுதி யும் பெற்றுவிட்ட அடியார்கள்! இவர்களும் வெறியர் களே! என முடிவு செய்தான் அவன். இனி அங்கே தனக்கு வேலையில்லை என்று எண்ணி, வந்ததுபோல் திரும்பினான். விடி-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/118&oldid=905876" இலிருந்து மீள்விக்கப்பட்டது