பக்கம்:விடிவெள்ளி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 19 அவனுடைய முயற்சிகளில் அவனுக்கும் மேலான எதுவே ஒன்று-விளக்க முடியாத ஏதோ ஒரு சக்திஅவனுக்குத் துணை நின்று அவனை இயக்குவதாகத்தான் அவனுக்கே தோன்றியது இவ்வேளையிலும் அவ்விதமே 莎洋-莎兹函· அவன் ஆற்றுப் பாதையிலிருந்து திரும்பி நகருக்குள் செல்லும் பெரிய வழியில் அடி எடுத்து வைத்தபோது, 'அட: இளம் எழுதியா? என்ற கேள்வி அவனைத் திடுக்கிட வைத்தது. "நான் வேறு யாரோ? என்று பயந்து விட்டேன்' அதனால்தான் மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன்' என்று கூறியபடி சாத்தன் கணபதி முன் வந்தான். 'உன்னைப் பற்றி எண்ணியபடிதான் நான் வந்து கொண்டிருக்கிறேன். பூங்குடி ஆட்சி வீட்டில் போய்க் காத்திருப்பாய் என்று எண்ணினேன். திடீரென்று குரல் கேட்கவும் நான் அதிர்ச்சி அடைந்தேன்' என்று சொல்விச் சிரித்தான் பழுதி. நல்ல வேளை! நான் உன்னை இங்கேயே பார்க்க முடிந்தது; தான் இதுவரை மீனாட்சி ஆட்சி வீட்டுக்குப் போகவில்லை. வீதிகளில் இரவில் எவரும் தலைகாட்டக் கூடாது என்று கட்டளை பிறப்பித்திருப்பதால்...' அப்படி ஒரு ஆணைபிறந்துவிட்டதா? அது எனக்குத் தெரியாதே' என அதிசயித்தான் வழுதி, ஆமாம் கூற்றன் நாயனார் கட்டளைகள் பிறப்பிப் பதற்கு ஒரு வரைமுறையே கிடையாது’ என்றான். சாத்தன். அதனால் நம் போன்றவர்கள் மிகுந்த விழிப் புடன் நடமாட வேண்டியிருக்கிறது ஆள் நடமாட்டத் துக்கே ஆபத்து என்றால், குதிரைகளோடு நாம் வரமுடி யுமா? ஆகவே, இருட்டுவதற்கு முன்னரே குதிரைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/120&oldid=905882" இலிருந்து மீள்விக்கப்பட்டது