பக்கம்:விடிவெள்ளி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ற விடிவெள்ளி அக்கரையில் ஓர் இடத்தில் கொண்டு போய், பாதுகாப் போடு நிறுத்திவிட்டு, வேறு சில முக்கிய அலுவல்களையும் கவனித்து விட்டு வருகிறேன். உன்னைச் சந்திக்க வேண்டுமே? என்ற எண்ண த்தோடு தான் இனம் பினேன்! அதற்குள் நீயே பேய் மாதிரி இங்கு திரிகிறாய்!” என்று கூறிச் சிரித்தான் அவுன். பேய்களாக மாறத் துடிக்கிற சில மனிதர்களின் பேச்சைக் கேட்க தேர்ந்த நான். இன்னும் யோகி விட வில்லை!" என் தான் அவன். அது என்ன சங்கதி’ என்று ஆவலுடன் கேட்டான் சாத்தன். . அக்கரை சேர்ந்ததும் மெதுவாகப் பேசிக்கொள் வோம் வா!' என்று நடந்தான், வழுதி. சாத்தனும் தொடர்ந்தான். - ஆற்றைக் கடந்து.உரிய இடம் சேர்ந்து, குதிரைகள் மீதேறிக் கொண்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் : அப்பொழுதும் இருள் தான் மூடிக் கிடந்தது அழகிய மதுரை நகரிலே! முதல் பாகம் முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/121&oldid=905884" இலிருந்து மீள்விக்கப்பட்டது