பக்கம்:விடிவெள்ளி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ) விடிவெள்ளி "நான் தான் அப்போதே சொன்னேனே! நமது குதிரைகளை நிறுத்தி வைத்திருக்கிற இடத்துக்கு நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்றான் சாத்தன். "அதைக் கேட்கவில்லை நான் என்று சற்றே சிடுசிடுப் பாகப் பேசினான் வழுதி பாரையோ பார்த்துப் பேசி னால், தேவையான உதவி எல்லாம் கிடைத்துவிடும் என்று பிராட்டியார் சொன்னார்களே? அவர் எங்கே இருக்கிறார்; அவரைக் காண்பதற்காகத்தான் நாம் போகி றோமா என்று கேட்டேன்' என்றான். நண்பன் மெதுவாகச் சிரித்தான். வழுதியின் அவ சரத்தைக் கண்டு அதன் பேரொலி போல எழுந்து பரவி யது. எங்கோ சிரித்த ஒரு ஆந்தையின் அலறல். இளம்வழுதிக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது. என் னிடம் கூட ஏனோ இந்த மர்மம்? நான் இப்பொழுது என்ன நினைக்கிறேன் தெரியுமா?’ என்றான் அவன் 'எனக்கெப்படி தெரியும்?' என்றான் சாத்தன். வழுதி அனல் மூச்செறிந்தான். இப்படி அர்த்த மில்லாமல் அலைந்து திரிவதைவிட, தெற்கு நோக்கிப் போயிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது எனது செவ்விருக்கை நாட்டிலும். அதனருகுள்ள இதர நாடு களிலும் எனக்காக எனது தோழர்கள் காத்திருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து, இனி நடக்க வேண்டியது பற்றித் திட்ட மிடுவதே அ ைைடமையாகும்' என்றான் 'பிராட்டியார் கூற்றில் உனக்கு நம்பிக்கை இல்லையோ?" என்று சாத்தன் கேட்டான். பிராட்டியாரின் எண்ணம் உயர்ந்தது. அதை நான் சந்தேகிக்கவில்லை ஆயினும் பிறர்மீது எனக்கு அவ்வள வாக நம்பிக்கை இல்லை' என்றான் வழுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/123&oldid=905888" இலிருந்து மீள்விக்கப்பட்டது