பக்கம்:விடிவெள்ளி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 123 சாத்தன்கணபதி சிறிது தூரம்வரை பேசவே இல்லை. இருளின் திருட்டுத்தனமான கண் சிமிட்டுதல்போல மின மினிப்பூச்சிகள் அவ்வப்போது ஒளிவெட்டி மிதந்துகொண் டிருந்தன. பாதையை விட்டு விலகி விலகி நின்று, இலை கள அடர்ந்த மரம் ஒன்றில் அப்பூச்சிகள் ஒரேயடியாக மொய்த்துக் கிடந்தன. நட்சத்திர மண்டலமே அங்கு நழுவி விழுந்து தொங்கிக் கிடப்பதுபோல் தோன்றியது. அதைக் கவனிப்பவன் போல, அவன் வாய் திறவாது நடந்தான். வழுதியும் அந்த அற்புதமான காட்சியைக் கண்டான். எனினும் அதனால் அவன் வசீகரிக்கப்படவில்லை. அவன் உள்ளத்திலே பலகரமான சிந்தனைகள் முட்டி மோதி. அவனை அலைக்கழித்தன. பலரிடம் நம்பிக்கை கொண்டு விடுவது மங்கை யர்க்கரசிப் பிராட்டியரின் நல்ல மனப்பான்மை...' அவன் பேசுவதையும் விரும்பாதவனாய் சாத்தன் உஸ்ஸ்! என்றான் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்காம விருப்பதே நல்லது. இரவில், இது போன்ற இடத்தில், வாய் திறவாமல் நடப்பதுதான் சிறந்தது. இருட்டுக்கு ஆயிரம் செவிகள் இருக்கக்கூடும்' என்றான். வேகமாக நடக்க முயன்றான். வழுதியும் அவனைப் பின்பற்றி நடித்தான் . ‘ந்ாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டுமோ? என்று இளம்வழுதி கேட்க எண்ணிய வேளையில், சாத் தனே வ ய்திறந்தான். இங்கு தான் குதிரைகள் நிற்க வேண்டும். கிழவன் இங்கேயே காத்திருப்பதாகச் சொன் னானே' என்று முணுமுணுத்தபடி சுற்றிலும் கூர்ந்து கவனித்தான். குடித்து விட்டுக் குடிசையிலேயே விழுந்து கிடக்கிற ஏனோ என்னவோ' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/124&oldid=905891" இலிருந்து மீள்விக்கப்பட்டது