பக்கம்:விடிவெள்ளி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 விடிவெள்ளி பெற்றுவிட்டவன் அவன். 'வாழ்க்கை என்பது இன்பங் களை அனுபவிப்பதற்குத்தான். சென்றது நமக்குத் தெரி யாது; இனி வரப்போவதையும் நாமறியோம். இப்பிறவி ஒன்றுதான் திச்சயமானது. அதை அனுபவித்து வாழாமல் மறுமைக்காக ஏங்கி நாட்களை வீணாக்குவது பேதமை அழகிகளும், மதுவும், நாமும், கூடுகிற இடத்திலே சொர்க்கம் ஏற்படுகிறது"- இவ்வாறு பல, பல பேசும் சொல் அல்லவன் அவன். இருவரையும் கெளரவிப்பதற்காக அன்றைய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது என்றுகொண்டால் அது தவறா காது. முக்கிய பிரமுகர்கள் பலர் விருந்தில் கலந்துகொண் உார்கள். பல் சுவை உணவும் மதுவும் தாராளமாகப் பரிம தப்பட்டன. இசை விருந்தும், நாட்டியமும் நிகழ்ந் தன. பேச்சுக்கும் சிரிப்புக்கும் குறைவே இல்லை. பூசுக்தனி எனும் ஆடலழகி ஒய்யாரமாக நடனமாடிக் கொண்டிருந்தாள். அவள் அழகையும். அசைவுகள் தோறும் மலர்ந்த புதுப் புதுக் கவர்ச்சிகளையும் விருந்தி ர்ை பார்வையால் விழுங்கி வியந்தபடி இருந்தனர். மார்பியஸ் அனந்து கொண்டிருந்தான். 'கடவுளரை மனிதராக மாற்றவும் வேண் .ாம். மணி தர்களைக் க!, அளராக மாற்ற ஆசைப்படுவதும் சரியல்ல. ஆனால் கடவுளர்கள் மனித உருவில் வந்து அற்புதங்கள் செய்ததாகப் பேசுவதில் பெருமையடைகிறார்கள் ஜனங் கள். அதேபோல ஒரு சில மனிதர் கடவுள் தன் வேலைகள் செய்தனர் என்று சொல்வதிலும் அவர்களுக்கு உற்சாகம் அதிகம்தான். இந்தப் பாண்டி நாட்டுத் தமிழர்களையே பாருங்களேன். வடிம்பலம்ப கின்ற பாண்டியன் என்று ஒருவன் இருந்தானாமே......” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/13&oldid=905900" இலிருந்து மீள்விக்கப்பட்டது