பக்கம்:விடிவெள்ளி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 129 நண்பன் இ ப் ப டி ச் சொல்லவும், வழுதி புன்னகையோடு குறும்புத்தினமாகக் கேட்.. :ன் : தண் டர் இந்த ரகசியங்களை எல்லாம் கற்றுக் கொள்வதற்குத் துணை புரிந்த குருபீடம் எங்கே இருக்கிறதோ? என்று தான். அது எனது சொத்த விஷயம் அதை நான் சொல்லமாட்டேன் என்றான். இதைக் கேட்டுத்தான் சாத்தன் கலசலவென நகைத் "எனது சொந்த விஷயமும் வேறே ஆகும்” என்று தோழனின் சுவைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் வழுதி ஆனால் அவன் மனப் பறவை இனிய நினைவு களிடையே சஞ்சரித்தது கவிதை பேசும் கண்களும் இனிமை துடிக்கும் இதழ்களும், அழகு மலரும் முகமும் தென்பட்டன. அவையோ அமுதவ லிக்குச் சொந்த மானவை! அந்த முகத்தை இன்னும் நன்றாகப் பார்த்துமகிழ்ந் தோமில்லையா; அஞ்சனம் தோய்ந்த அழகு விழிகளின் துடிப்பை மீண்டும் காண மாட்டோமா; இளநகை எழி லுருத்தும் பவள உதடுகளை இனி என்று கண்டு, ஒளிச் சிரிப்பால் மனம் மகிழ முடியுமே?-இவ்வாது அவன் உள்ளம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. என்னைக் கோபித்துக் கொண்டாயே! காதலியின் தினைவு உன்னை வதை செய்கிறது என்பது புரிந்து விட்டது வீணாக நீ அதை மறைப்பானேன்?’ என்றான் சாத்க: ன். வழுதி பதில் பேசவில்லை. பொருள் பொதித்த முறுவலே பூத்தான். - சரி. இனி நமது கடமைகளைக் கவனிப்போம். மாறன் காரி என்பவரிடம் உன்னை அழைத்துச் செல்லும் படி பிராட்டியார் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவருக்கு நீ தரவேண்டிய திருமுகம் இதோ இருக்கிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/130&oldid=905901" இலிருந்து மீள்விக்கப்பட்டது