பக்கம்:விடிவெள்ளி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 விடிவெள்ளி நான் உன்ன்ை அவருக்கு அறிமுகம் செய்துவிட்டு' இங்கிருந்து நீங்க வேண்டும். எனக்குச் சில முக்கிய அலுவல்கள் இருக்கின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு நான் இங்கு வருவேன் அதுவரை நீ இங்கேயே இருந்தால் நாம் சந்திப்போம். மாறன் காரி வேறு வழிவகுத்துக் காட்டினால், நீ எனக்காக காத்திருக்க வேண்டாம் , என் தான் சாத்தன் கணபதி 2. வேண்டாத விருந்தாளி விடித்தும் விடியா வெள்ளிளம் போதிலே ஒருவர் முன் போய் நிற்க வேண்டாமே என்ற நல்லெண்ணத் தோடு, இளம்வழுதியும் சாத்தனும் வசதியான இட மொன்றில் காலை உணவு உட்கொண்டு விட்டுச் சிறிது தங்கியிருந்து களைப்பாறினர். - அவர்கள் தேடிவந்த சமயத்தில் மாறன் காரி உண்டு மகிழ்த்து சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இருவரும் அவரை வணங்கி நின்றனர். மதுரையிலிருந்து வருகிறோம். இவர் என் நண்பர்-இளம்வழுதி என்று அறிவித்தான் சாத்தன். அவனை அவர் முன்பே அறிந் திருத்தார்: - புதிதாக வத்தவர்களைக் கண்ட துமே, காரியோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் விடைபெற்று வெளியேறி னார்கள் "மதுரையிலிருந்தா? ஹஇங்!’ என்று இழுத்தார். பெரியவர். இளம்வழுதி அவரை அவருக்குத் தெரியாமலே எடை போட்டுக் கொண்டிருந்தான். - குறுநில மன்னர் போல் மிடுக்காக வாழ்ந்தவர் மாறன் காரி. கவலையற்று வளர்ந்த உடல். கட்டளையிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/131&oldid=905903" இலிருந்து மீள்விக்கப்பட்டது