பக்கம்:விடிவெள்ளி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 விடிவெள்ளி களில் சிறு அசைவு கோடிட்டது. செவ்விருக்கை நாட்டுப் பெரும் வழுதி வழி வந்தவனா நீ? உம் என்று மென்குர லில் பேசினார் அவர் ஆமாம். பாண்டியர்கள் வாழ்ந்த வாழ்வு பழங்கதையாகி விட்டது, ஆள வேண்டியவர்கள் அடிமைகள் ஆகிவிட்ட சர்கள். அச்சம் அவர்களைச் செய லற்றவர்களாக்கிவிட்டது. அரியனை ஏதத் தகாதவர்கள் கோல் பிடித்து விட்டார்கள் நாடு பாழாகிவிட்ட து’ என்றான். வழுதி எதிர்பாராதபோது, அதற்கு நீ என்ன வேண்டுமென்கிற:ய்?' என்று உறுமினார் அவர், جیسی அவன் திடுக்கிட்டான். அவனது திகைப்பைக் கண்டு மகிழ்வுந்தார் அவர். இளம்வழுதி வரகுணத்தேவரிடம் ஒரு நாள் உவகைப் பெருக்குடனும் உணர்வுத் துடிப்போடும் பேசத் துணிந் தது போலவே, காரியிடமும் தனது எண்ணங்களைத் தெரி விக்க முன்வந்தான் நாட்டு நிலை பற்றியும், மதுரையில் நிகழ்ந்தன பற்றியும் எடுத்துச் சொன்னான். தன் தாயின் ஆசைகள் பற்றிச் சொன்னான். அன்னையின் ஆசைகள் என்றுமே பெரியன. அவற் றுக்கு அளவு இருக்கவே முடியாது!’ என்றார் பெரியவர். என்ன கருத்தில் அவர் அல்வாது பேசினார் என்று அறிய முயல்பவன் போல் வழுதி, காரியின் முகத்தை நோக்கினான். அது வெண்கலத்தில் வார்த்தெடுத்த சிலை மாதிரி மினுமினுத்தது. அதிலிருந்து அவன் எதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. 'உம் சொல்லு' என்றார் காரி, அவர் பேசினாரோ, பேசவில்லையோ என்று ஐயுறச் செய்வதாக அமைந்தது. அவ்வொலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/133&oldid=905907" இலிருந்து மீள்விக்கப்பட்டது