பக்கம்:விடிவெள்ளி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 விடிவெள்ளி அவர் நையாண்டிபண்ணுவது போல் சிரித்த மாதிரித் தோன்றியது அவனுக்கு. மறுபடியும் கவனமாகப் பார்த்த ന്നു. - * * .* - + - . * போது, உணர்ச்சிகளைப் பிரதி பவித்துக் காட்டாத சிலே போல்தான் காட்சி தந்தது அவர் முகம் - 'அச்சுறுத்தும் நாட்கள்தான் அவலமான நிலைமை தான். என்றார் அவர். சிறிது நேரம் மெளனமாக இருந் தார். திடீரென்று, நீங்கள் இரண்டு பேரும் வடபறம்பு தாட்டுக்கு எப்போது வந்தீர்கள்? எப்படி வந்து சேர்த் தீர்கள்?' என்று கேட்டார். மாறன் காரியின் இடப் பெயரை அவன் அப்பொழுது தான் அறிந்துகொண்டாள் அவர் பெயரைச் சொன்ன சாத்தன்கணபதி அந்த நாட்டின் பெயரைச் சொல்ல பதந்து விட்டான் என்பதை அவன் அப்பொழுதே உணர்த் தான் எனினும் அதை வெளியிடவில்லை. தங்களுடைய இரவுப் பயணம் பற்றி அவன் விவரித்தான். - இளம்வழுதி கூறிமுடித்ததும், முதலில் உனக்கு ஒய்வும் துக்கமும் தான் தேவை. நீராடி உணவு உட் கொண்ட பிறகு, அமைதியான இடத்தில்படுத்து, நன்றாகத் தூங்கு தான் செய்யும் முதல் உதவி இது' என்றார் காசி. குறும்புத்தனமான சிறு முறுவல் அவரது வாயோரத்தில் சுழியிட்டதுபோல் தோன்றியது. நிச்சய மாகத் தீர்மானிக்க இயலவில்லை அவனால். ... மாறன்கா ரீ நம்பத். தகுந்தவராகத் தோன்றவில்லை என்று அவன் மனம் மீண்டும் முனகியது. இங்கே வரு வதற்கு முன்னரே இப்பிரயாணத்தினால் எல்வித நன்மை யும் ஏற்படாது என்ற எண்ணம் எழுந்தது. தவறாத குறி யாகவே முடியும் போலும் என்று கருதினான் அவன். 'உதவி கோரி வந்தாயிற்று. முடிவாக அவர் கருத்தை அறியும் வரை இங்கே இருந்ததானே ஆகவேண்டும்? அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/135&oldid=905912" இலிருந்து மீள்விக்கப்பட்டது