பக்கம்:விடிவெள்ளி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 0 விடிவெள்ளி வழியாகப் புகுந்து அவனருகே விழுந்து துள்ளிஉருண்டது அது, சுவரோரம் சென்று நின்றது. 聽 "葛 - * F *; - >* * * இதை யார் இப்படி எறிந்தது' என்று கேட்டது வழுதியின் மனம். வெளியே புரண்டது அவன் பார்வை. - تقنيتي உயிர் பெற்ற பூச்செண்டுபோல் ஓடிவந்த ஒரு சிறுமி அவன் பார்வையில்பட்டான். அவளுக்கு ஐந்துவயதுக்குள் தானிருக்கும். களிதுலங்கத் தத்திவரும் சின்னஞ்சிறு குருவி போல் அவளும் ஆனந்தமயமாகத் தோன்றினாள்: அங்கும் இங்கும் சுற்றி. பார்த்துக் கொண்ட வந்த சிறுமி, சாளரத்தின் அருகே நின்ற வழுதியைக்கண்டான் குறுகுறுக்கும் அவள் விழிகள் அந்த அறைக் கதவின் முன்புறம் பூட்டு தொங்குவதையும் கவனித்தன, ஏதோ மகத்தான அற்புதத்தை நோக்குவதுபோல், விழி வியப் புடன், வாயில் விரலை வைத்துக்கொண்டு, அவனையே ஆச்சரியமாகப் பார்த்தாள், அவள் பிறகு அக்கா! அக்கா! இங்கே வாயேன். ஒரு அதிசயம். ஒடி வா. அக்கா !' என்று கத்தினான். ' என்ன அதிசயம் கண் டுவிட்டாய்?' என்ற கேள்வி எறிந்தபடி ஓடிவந்தாள் அவள் அக்கான். அத்தக் குரல் இளம்வழுதியின் உள்ளத்தில் இசை எழுப்பியது. அங்கு வந்து நின்றஉருவம் அவனது உணர்வு அலைகளை மகிழ்வால் துள்ள வைத்தது. தன் கண்கள் தன்னை ஏமாற்றவில்லையே என்ற நினைப்போடு, இமைகளை மூடிமூடி த் திறந்தான் அவன். விரல்களால் கண்களைக் கசக்கினான். அது கனவோ. மயக்குத் தோற்றமோ அல்ல! அமுதவல்லிதான் அங்கு நின்றாள் "இவள் இங்கு எப்படி வந்தான்? எப்பொழுது வந்தாள்? ஏன் வந்தாள்?- எல்லாக் கேள்விகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/139&oldid=905920" இலிருந்து மீள்விக்கப்பட்டது