பக்கம்:விடிவெள்ளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 13 ஆமாம். ஒரு சமயம் கடல் பொங்கி எழுந்தபோது அவன் வேல் எறித்து அதை அடக்கிவிட்டதாகச் சொல் கிறார்கள் என்று விஷ்னு:சிம்மன் கூறினான். இவன் மதுரையில் குடியேறி, செல்வம் திரட்டி, அந்நகரத்துப் பெண்ணை மணத்துகொண்டு சுகமாக வாழ்பவன் மார்பியஸ் பிரமாதமாகச் சிரித்தான். அந்தச்சிரிப்பு வீதியிலே வந்து ஒரு ஒரத்தில் சுவரோதி சுவராக இருளில் கலந்து தின் நவனின் காதுகளை அதுப் பதுபோல் ஒலித்தது. மேலும் காது அடைபட்டுப்போகும் படி அன்ை கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் எழுந்தது யவன ஞானியின் பேச்சு. "அதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். பொங்கி எழுந்தது பிரளயம், உலகமே அழிந்துபட்டது. ஆனால் எங்கள் பாண்டியன் அருகே வந்ததும் அது அவன் பாதங் களைத் தொட்டு அலம்பி வணங்கி வடிந்துவிட்டது என்று சொல்கிறார்களே! எவ்வளவு அபத்தமான பேச்சு!" என்றான் அன்ை. "தலைக்கணம்ான தற்புகழ்ச்சி' என்று உறுமினான் உக்கிரதாதன், "அளவில்லாமல் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள் வதில் இந்தத் தமிழர்களுக்கு இணையாக வேறு எவருமே இருக்க முடியாது’ என்று கூற்றுவன் நாயனார் கூறினான். ఢః பெருமைதான்: உண்மையில் அவர்கள் பொட்டுப் பூச்சிகளாகவும் புழுதியோடு புழுதிய சிகி மறைந்து கிடக்கும் தேரைகளாகவும்தான் எனக்குத் தோன்றுகிறார்கள்......" மார்பியஸ் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/14&oldid=905922" இலிருந்து மீள்விக்கப்பட்டது