பக்கம்:விடிவெள்ளி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 141 வெளியூர் போயிருக்கிறாரோ என்னவோ! இங்கு வந்த சிறுமியின் தாத்த மாறன்காரியாகத் தான் இருக்க வேண்டும்." - அவன் மனம் குழம்பிக்கொண்டு தானிருந்தது அவன் வேதனையைப் பொருட்படுத்தாமலே காலம் ஓடியது. இருள் பரவியது. வழுதியின் உள்ளித்தில் நிறைந்துவிட்ட இருட்டைப்போலவே, அந்த அறையிலும் வெளிஉலகிலும் இருள் கனத்தது. அவன் உணவைப்பற்றியோ, உறக்கத்தைப் பற்றியோ கவலை கொண்டானில்லை. எப்படியும் இவ்விடத்தை விட்டு வெளியேறியாக வேண்டும், அவனுடைய எண்ணங் களும் கனவுகளும் பொய்த்துப் போகாமல் இருப்பதற்காக தனது அன்னையின் ஆசையையும் ஆக்கினையையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவன் தப்பியாக வேண்டும். அதற்கு வழி என்ன? இதுதான் அவனது பெரிய கவலை - விழித்திருந்து அலுப்புற்ற உலகத்தின் ஒலிகள் இரவின் கரிக ஆழத்திலே ஒய்த்து அடங்கிக் கொண்டிருந்தன. பகலில் ஒடுங்கிக் கிடந்த குரல்களும் கூவல்களும் இப்போது மேலெழுந்து ஒசையிட்டன. அவைகூட க் கொஞ்சம் கொஞ்சியாகத் தேய்ந்து ஒலித்தன. குளிர் காற்று ஊச லிட்டது. தனது எண்ணங்களும் தாலுமாய்த் தனியே --’ அதுவரையில் காதுகளில் விழாத புதிய ஓசை ஒன்றை அவன் உணர்வு இனங்கண்டு கொண்டது. யாரோ நடத்து வரும் காலடி ஓசைதான் அது விழிப்புடன் துள்ளிஎழுந்து நின்றான் வழுதி. தன்னைத் தாக்குவதற்காகத்தான் இருளில் பதுங்கி எவரே. வருகிறார்கள் என்று திண்ண மாகத் தோன்றியது அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/142&oldid=905928" இலிருந்து மீள்விக்கப்பட்டது