பக்கம்:விடிவெள்ளி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 விடிவெள்ளி வேகமாக வந்த ஒசை கதவருகில் சிறிது தயங்கியது. பிறகு பூட்டைத் திறக்கும் ஒலி எழுந்தது. கதவு மெல் லெனத் திறந்தது. இளம் வழுதி மூச்சைக்கூட மெதுவாக்கிக் கொண்டு அசையாது நின்றான் ஒரு சுவர் ஒரத்திலே, என்ன து.ாக்கமா?’ என்ற கேள்வி அவனை உலுக்கியது. அக் கேள்வியைவிட, அதை ஒலி செய்த மென் குரல் அவனுக்குச் சிலிர்ப்பு உண்டாக்கியது. 'அமுதவல்லி நீதானா! என்று ஆவலோடு கேட்டபடி முன்னே தகர்த்தான் அவன். "ஆமாம். நான் தான் என்று முணுமுணுத்தாள் శ్రీ షో శ? , - - -

  • ,

அமுதம்! உன்னைப்பற்றியே நான் எண் ணி வந் தேன். இங்கே பார்க்க முடியும் என்று தான் நினைக்கவே யில்லை...' என்று ஆரம்பித்தான். அவன் பேச்சுக்கு அவள் தடை விதித்தாள். இப் போது வீண் பேச்சுப் பேசுவதற்கு நேரமில்லை மாறன் காரி எனக்கு உறவினர்தான், மதுரையில் நிலைமை சீர் கெட்டும் போனதால், அஞ்சுவதற்குரிய சூழ்நிலை ஏற் பட்டு விட்டதால், இங்கு வத்து சிலகாலம் தங்கியிருக்க சிாம் என்று என் அன்னை திட்டமிட்டார்கள். என் தாய்க்கு ஒருவகையில் அண்ணன் இந்தக்காரி, நாங்கள் இன்று கலையில்தான் இங்கு வந்து சேர்ந்தோம்...” என நாள. - 'நான் கூட இன்று காலையில்தான் இங்கு வத்தேன்; மாறன் காசியின் துண்ை கிட்டும்; எனது திட்டம் வெற்றி பெறும் என்று கணபதி என்னை இங்கு அழைத்து வந் தான்' என்றான் வழுதி. - 'காரி நல்லவர் தான். ஆனால் அவருடைய நலனுக்கு உங்கள் திட்டங்கள் குறுக்கே நிற்கின்றன. பாண்டி நாட்டைப் பழைய வளமான நிலைக்கு மாற்றவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/143&oldid=905930" இலிருந்து மீள்விக்கப்பட்டது