பக்கம்:விடிவெள்ளி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 143 மென்ற ஆசை அவருக்கும் இருக்கிறது. ஆனா இன் து மகன் மன்னனாகவேண்டும். தான் அவனை ஆட்டி வைக்கும் மூலவராக விளங்கவேண்டும் என்று அவர் கெடு நாட் களாகவே கனவு கண்டு வருகிறார் அதைக் கெடுக் கும் முறையில் செயலாற்றத் துணிகிறவர்களுக்கு அவர் துணை நிற்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்' என்றாள் அமுதம், 'ஒகோ' என்றான் வழுதி உண்மைத் தெளிவு பெற்றவனாய். "இந்த உண்மை நான் அறிந்து கொண்டதும், நீங்கள் இங்கேயே இருப்பது பெருங்கேடாக முடியும் என்று உணர்ந்தேன். எனது ஆற்றலுக்கு ஏற்ற முறையில், சில ஏற்பாடுகள் செய்து விட்டு. உங்களை விடுவிக்க இங்கு வந்தேன் மாறன் காரி மதுரைக்கோ, வேறு எங்கோ போயிருக்கிறார்; நாளைக்கு வந்து விடலாம். இந்தஇடை வேளையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவே வேண்டும் இவ்வழியே சென்றால் அதே அங்குள்ள மரத்தடியில் உங்களுக்காக ஒரு குதிரை காத்து நிற்கும், இரவோடு இரவாக நீங்கன் மறைந்து போவதே நல்லது. இன்று தெய்வம் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக் கிறது. அதற்காக எப்படி நன்றி தெரிவிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை’ என்று அமுதவல்லி உணர்ச்சிப் பெருக்கத் தோடு மொழித்தாள், அமுதம்! நீயே என்னைக் காக்க வந்த தெய்வமாகி விட்டாய். உனக்கு...' என்று வழுதி அவள் கைகளைப் பற்றினான். காலம் வரட்டும். காத்திருப்போம். இப்பொழுது நீங்கள் சீக்கிரம் தப்பிச் செல்வதே அறிவுடையாகும்' என்றாள் அவள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/144&oldid=905932" இலிருந்து மீள்விக்கப்பட்டது