பக்கம்:விடிவெள்ளி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஐ விடி வெள்ளி தாக எண்ணிக் கொண்டு திரும்பி வேறு திசையில் சென்று விடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம், அபூர்வமாகச் சில சமயங்களில் இந்த முறை ஊர்க் காசர்களுக்கு வெற்றி அளித்தது. அநேக தடவைகள் இன்னும் ஏதாவது மிஞ்சிக்கிடக்கும்' என்று ஆசைப் பட்டு வெறியர்கள் உள்ளே புகுந்து உண்மையைப் புரிந்து கொண்டு அதிகமான ஆத்திரத்தோடு அழிவு வேலை செய்வதும் சகஜமாயிற்று...... - - செவ்விருக்கை நாட்டில் இப்படி ஒரு சூழ்நிலை உரு வாக்குவதற்கு இருந்தது. களப்பிரர்கள் எந்த நேரத்தி லும் அங்கு வந்துவிடலாம் என்ற பயம் நிலவியது. பழி வாங்கக் காத்திருந்தார்கள் இளைஞர்கள். - முதிய பெண்கள் வீட்டு முன்னால் பானைகளைப் போட்டு உடைப்பது பற்றி யோசிக்கலானார்கள். "நாம் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? வீணாக அவற்றை இப்போது உடைப்பதைவிட, வெறியர்கள் வருகிறவரை காத்திருந்து அவர்கள் தலை மீதே போட்டு உடைக்கலாமே!" என்றாள் அன்னம் அவள்தான் இளம் வழுதியின் தாய் உள்ளத்தில் உறுதிபெற்றிருந்த மறக்குல மங்கை அவள், பணிந்து போவதோ, பயந்து ஒடுங்கிக் கிடப்பதோ அவளுக்கு உகந்ததல்ல அஞ்சி அஞ்சிச் சாவானேன்? இப்படிச் செத்த வாழ்வு வாழ்வதைவி. வீரமான முறையில் சாவை ஏற்றுக் கொள்வதே சிறந்தது.' என்று சொன்னாள் அன்னம். அவள் பேச்சைச் சிலரே கேட்கத் தயாராக இருந்தார் கள் மற்றவர்கள் முகத்தைச் சுளித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/147&oldid=905938" இலிருந்து மீள்விக்கப்பட்டது