பக்கம்:விடிவெள்ளி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் ( 147 " இது பைத்தியக்காரத்தனம். வெறி பிடித்து வருகித பேய்களை எதிர்த்து நாம் என்ன செய்யமுடியும்?' என்றாள் ஒருத்தி, 'குதிரையின் காலடி யில் விழுந்ததும், கத்தி வீச்சுப் பெற்றும் செத்துப் போகலாம்' என்று கேலியாகச் சொன்னாள் வேறொருத்தி. 'வெறியர்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணுவதும் பேதமைதான். இத்தகைய கூத்துக் கன் எத்தனையே பதுக்கமாகிவிட்டன. அவர்களுக்கு. முதலில் ஏமாற்றம் ஏற்படலாம். ஆனால் அந்த ஏமாற் றமே அவர்களுடைய வெறியை மேலும் தூண்டி விடும்' என்று அன்னம்மாள் கூறினாள் தங்கள் தங்கள் விருப்பம் போல செயல் புரியத் துடித்தவர்கள் அவள் பேச்சைக் கேட்கவில்லை. அதற்காக அவள் வருந்தவுமில்லை அன்னத்தின் உள்ளம் இளம்வழுதியை நினைத்தது. அவன் எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறானே என்ற எண்ணம் எழுந்தது. அவனை ப்பற்றி எண்ணும்போதெல் லாம், அலுளுள் ஒரு உவகை பிதக்கும். அவளுக்கு மன நிறைவு உண்டாகும். அவனுடைய தந்தை இறந்த பிறகு, அவள்தான் அவனுக்குத் தாயாய், தந்தையாய். ஆசானாய் விளங்கினாள். தனது ஆசைகளையும், கனவுகளையும், ஏக்கங்களையும், உணர்வுத் துடிப்புக்களையும் சிறிது சிறிதாக அவனுக்குப் புகட்டி அவனை நல்வழியில் உருவாக்கினாள். நாட்டுப்பற்றையும், குடிப்பெருமை சிறு வயது முதலே அவனுக்கு ஊட்டி, அவனை வீரனாக வளர்த்தாள். லட்சியக் கைைல அவனுள் எழுப்பினாள். தனித்தியங்கும் தன்மையும், தற்காத்துக்கொள்ளும் திறனும் பெற்றுவிட்டான் தன் மகன் என்ற உணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/148&oldid=905939" இலிருந்து மீள்விக்கப்பட்டது