பக்கம்:விடிவெள்ளி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ) 158 திடுக்கிட நேர்ந்தது, இனம்வழுதி காணாமல் போன் விட் டான் என்பதை அறித்ததும்" "எப்படிப் போனான்? யார் அவனை வெளியே திறந்து விட்டது? அவனுக்கு உதவி செய்த துரோகி யார்?'இவ்வாறெல்லாம் சீறி விழுந்தார் அவர் 'எனக்குத் தெரியாது!’ எங்களுக்குத் தெரியாது’ என்று தான் எல்லோரும் பதில் அளித்தார்கள். 'அவன் என்ன பேயா, பிசாசா? கதவு பூட்டிக்கிடக் கும் போதே வெளியேறி விடுவதற்கு?’ எனச் சிடுசிடுத்தார் காரி. - "அதுதான் எங்களுக்கும் வியப்பாகஇருக்கிறது என்று சிலர் முனங்கினர். 'அவனுக்கு மந்திரம் மாயம் ஏதாவது தெரிந்திருக்கும்’ எப்படியோ புகைமாதிரி வெளியே போய் விட்டான். என்று ஒரு கிழவன் முணுமுணுத்தான். ‘மூடு வாயை, உனறாதே. அவன் சாதாரண ஆள் தான். அவனுக்கு வேண்டிய யாரோ இருக்கிறார்கள். எவரும் அறியாமல் அவனுக்கு உதவி புரிந்திருக்கிற சர்கள். அவ்விதம் செய்தது யார் என்று தெரிந்தால்-அது யாராக இருந்தாலும்...சிறிது கூட இரக்கம் காட்டமாட்டேன். மாறு கால் மாறு கை வாங்கி, கழுகுகளும் காக்கைகளும் கொத்திக் குதறும்படி வெட்ட வெளியில் வீசி எறிவேன். சுண்ணாம்புக் கானவாயில் போடும்படி ஏவுவேன்' ன்று கொதிப்புடன் கத்தினார். அவர் அவ்வாறு செய்யக் கூடியவரே என்பது அவரைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும், அவர் சினம் கணத்துக்குக் கணம் அதிகரித்து வருவதை உணர்ந்த பல ரும் நடுங்கினார்கள். ஆயினும் யார் அவ்வளவு துணிவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/154&oldid=905953" இலிருந்து மீள்விக்கப்பட்டது