பக்கம்:விடிவெள்ளி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 0 185 தொட்ட பொருள்களையும் அது மோப்பம் பிடித்தது. பிறகு, வழுதி நடந்துபோன தடத்தைப் பின்பற்றிச் சென்றது. அவனுக்காகக் குதிரை காத்து நின்ற இடத் தைக் கண்டதும், ஒரு குர்ைப்புக் குரைத்தது ஒடத். தொடங்கியது. அதைப் பின் தொடர்த்து குதிரைகள் மீது செல்லும் படி ஐந்து பேரை அனுப்பி வைத்தார் மாறன்க: ரி. வழுதி நிச்சயம் அகப்பட்டு விடுவான்' என்று அவர் உள்ளம் திருப்தி அடைந்தது. காரி மனநிறைவுடன் வீற்றிருந்த போது வந்து சேர்த் தான் சாத்தான் கணபதி. இளம்வழுதி எங்கே?' என்து கேட்டான். - எனக்கென்ன தெரியும் என்று அலட்சியம்ாகப் பதிலளித்தார் அவர் "நீங்கள் அவனை எங்கேனும் அனுப்பிவைத்தீர்களா?

  • நான் ஏன் அவனை அனுப்பப் போகிறேன்!" என்று அழுத்தலாகப் பேசினார் காரி.

பின்னே?" - இரண்டு நாட்களுக்கு முன், அவன் போய்விட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே ஒடி விட்டான்... நன்றி கெட்டவன்' என்று முனங்கினார் அவர். "நான் வரும்வரை இங்கேயே தங்கியிருக்கும்படி சொன்னேன்...” - வேற்றுார் சென்றிருந்த நான் திரும்பி வருகிற வரை கூட அவன் காத்திருக்கவில்லையே!' என்று கூறி, வறட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிதறினார் பெரியவர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/156&oldid=905957" இலிருந்து மீள்விக்கப்பட்டது