பக்கம்:விடிவெள்ளி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ( 157 அதை அவள் சொன்ன விதமும், அவளுடைய முக பாவமும் அவனுக்கு வியப்பளித்தன. ஏன்? அங்கே பேய் ஏதாவது இருக்கிறதோ?’ என்று கேட்டான். ஊகும். ஒரு ஆள் உள்ளே இருந்தது. வெளியே பெரிய பூட்டு போட்டுப் பூட்டியிருந்தார்கள். அந்த ஆள் எப்படியோ உள்ளே போய்விட்டது. பிறகு, கதவைத் திறக்காமல் எப்படியோ வெளியே வந்து காணாமலே சோங்விட்டது. அந்த ஆள் எங்கே போயிருக்கும்? அது தாத்தாவுக்கே புரியவில்லை. அவனைப் பிடிக்க எங்கள் வேடன் ஒடிப்போயிருக்கிறது..." சிறுமியின் பேச்சு சாத்தனின் ஆவலைத் துரண்டியது. "வேடனா? அது யார்?’ என்றான். வேடன் தெரியாது? ஐய! அது பெரிய வேட்டை நாங். அந்த ஆளை அது பிடித்துவிடும். கடித்துக்கொன்று விடும் தெரியுமா?’ என்றாள் சிறுமி. 98 م. "இந்த வீட்டினுள்ளே இருந்த ஆளை நீ'பார்த்தாயா? என்று கேட்டான் அவன். 'ஓ' என்று உற்சாகமாகச் சொல்லி, தனது சந்திப்பைச் சுவையாக வர்ணித்தான் அவள் அவன் எப்படியிருந்தான்? அவனைப் ப்ார்ப்ப தற்கே பயமாக் இருந்ததோ?’ என்று சாதுரியமாக அவன் விசாரித்தான். 'இல்லே...உன்னைப்போல்தான் இருந்தார். நல்லவர் தான். உள்ளே போன என் பந்தை எடுத்துக் கொடுத் தாரே!” என்று முத்து பெருமையாகப் பேசினாள். சாத்தன் கணபதியின் உள்ளத்தில் தலையெடுத்திருந்த சந்தேகம் இப்போது வலுப்பெற்று வளர்ந்தது. அதை எவ்விதம் தெளிவுபடுத்திக்கொள்வது என்று புரியாமல் திகைத்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/158&oldid=905961" இலிருந்து மீள்விக்கப்பட்டது