பக்கம்:விடிவெள்ளி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் C 138 காரியைக் காணச் செல்வதில் வழுதிக்கு விருப்பம் இருத்த தில்லை. அவரைச் சந்திப்பதால் பயன் விளையாது என்ற ஜயம் அவனுக்கு எழுந்ததை நான் உணர்ந்தேன். தான் தான் வற்புறுத்தி, அவனை அங்கேயே தங்கியிருக்கும்படி சொன்னேன். இப்போது வழுதிக்கு ஆபத்து சூழ்ந்து விட்டதால், அவனை எச்சரித்து அவனுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும் என்னையே சேருகிறது. உங்களிடம் இதைக் கூறிவிட்டுப் போகவே இங்கு வந்தேன்!” என்று அறிவித்தான் சாத்தன் - "மாறன்காரி நம்பிக்கைத் துரோகியாக மாறுவார் என்று நான் நினைக்கவேயில்லை. வழுதிக்கு வழிகாட்ட முன்வந்தது நான் தானே? ஆகவே தவறான வழிகாட்டிய பழி என்னையே சேரும். அதற்குத்தகுந்த மாற்று கண்டு வழுதிக்கு உதவி செய்தால்தான் என் உள்ளம் அமைதி புறும்’ என்று மங்கையர்க்கரசி சொன்னாள். சாத்தன் மேலும் வீண் பொழுது போக்கவில்லை. அவன் குதிசை தெற்கு நோக்கு அம்பெனப் பாய்ந்தது. 6. பொங்கும் காட்டாலு சிறு தீப்பொறி ஒன்று. ஒரே ஒரு பொறிதான். மினுமினுக்கும் அது உலர்ந்த சருகுகளிடையே விழுகிறது. கன்கிறது சிவப்பு பெரிதாகிறது. ஒற்றைப் பொறி ஒளிச் சிரிப்பு சிரிக்கிறது. பெரும் நெருப்பாகப் படர் கிறது காய்ந்த புல். பூண்டு, வைக்கோல், வாடிய செடிகள், பட்ட மரங்கள எல்லாம் உதவி புரிகின்றன. அது காட்டுத்தீயா சுச்சீறுகிறது. வெறிக்கூத்து ஆடுகிறது. சிறு சிறு துளிகளாக விழுகின்ற மழைநீர், மலையின் பரப்பில் அங்குமிங்குமாக நிற்கிறது. அசைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/160&oldid=905967" இலிருந்து மீள்விக்கப்பட்டது