பக்கம்:விடிவெள்ளி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 - விடிவெள்ளி தெளிந்து நகர்கிறது. பல நீர்க்கோடுகள் கூடுகின் றன. ஒடுகின்றன. சிற்றாறு ஆகிச் சலசலத்து முன்னேறு கின்றன. மேலும் மழை பெய்யப் பெய்ய, பல கிளைகள் வந்து கூட, சிற்றாறு பேயாறாக மாறுகிறது, பெருக் கெடுத்து ஓடிவந்து அடித்துப்புரண்டு அருவியாய் வீழ்ந்து வெறி வேகத்தோடு ஒடுகிறது. அதன் எதிர்ப்பட்டவை அனைத்தும் அழிந்துபடுகின்றன. மனித உணர்ச்சியும் நெருப்புப்போல் பசவக்கூடியது தான். எங்கும் பரவி, எல்லோரையும் பற்றிக்கொள்ளக் கூடிய உணர்வுக் கொதிப்பு கூட காட்டாறுபோல் வெறி வேகத்தோடு இயங்க வல்லதேயாகும். இனம் வழுதி தனியாகத்தான் கிளம்பினான். ஆயினும் அவனுடைய உணர்ச்சிக் கொதிப்பு மிக்க வலிமையுடைய யது. அவனுடைய சொல்லும் செயலும் தகுந்த எதிரொலி எழுப்பக்கூடிய சூழ்நிலை நாட்டிலே ஏற்பட்டிருந்தது. அவனது எண்ணங்களையும், ஆசைத் துடிப்புகளையும் ஏற்று, அவனுக்குத்தேவையான உதவிகளைச்செய்வதற்கு வேண்டிய ஒரு பக்குவம் மக்களிடையே பரிணமித் திருத்தது. - அவரவர் தொழிலைச் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து வந்த தங்களைக் கொடுமைப்படுத்தி, தொல்லைக்கு ஆளாக்கி, அச்சத்தையும் அவலமான நிலைமையையும் எங்கும் பரப்பி வந்த வீணர்களுக்கு அடங்கி ஒடுங்கிக் கிட்ப்பதில் பயனில்ல்ை என்ற மனப் பண்பு தலைதுாக்கியிருந்தது. பொறுமை மிகுந்த பசு கூட் , எல்லை மீறப்பட்டால் சீறி எதிர்க்கத் துணி கிறது. புழுக்களும் தலை தாக்கி எதிர்ப்பைக்காட்ட முரண்டுகின்றன. மனிதர்கள் மட்டும் எவ்வளவு காலம் உணர்வற்று ஒடுங்கிக்கிடக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/161&oldid=905969" இலிருந்து மீள்விக்கப்பட்டது