பக்கம்:விடிவெள்ளி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 விடிவெள்ளி 'அப்படியென்றால், எனது நண்பர்கள்தான்’ என்று உற்சாகமாகக் கூவினான் அவன். தொடர்ந்து சொன் சைன்: இன்று நான் நல்ல செயல் ஒன்று புரிந்தேன், வேட்டை நாய் ஒன்றை ஏவிவிட்டு சிலர் யாரையோ தேடிக் கொண்டிருந்தார்கள். தற்செயலாக அங்கு வந்த ஒருவனிடம் இளம்வழுதி இங்கே எங்கு இருக்கிறான் சொல்லு' என்று மிரட்டினார்கள். அவன் வாய் திறக்க மறுக்கவும் அல்வெறியர்கள் அவனைக் கொன்று போட் டார்கள். ஆற்றோரத்தில் இது நடந்தது. இருளில் மறைந்து வந்த நான் ஒலியைக் குறியாக வைத்து அம்பு எய்து முதலில் நாயைக் கொன்றேன். பிறகு அங்கு நின்ற வீணர்களையும் கொன்று விட்டேன்...' - பெருமிதம் ஒலி செய்தது அவன் பேச்சில். ஆகா, உண்மையிலேயே நல்ல காரியம்’ எனக் கவினான் சாத்தன் கணபதி. "என்னை அறிந்து கொள்வதற்கு முன்பே என் உயிர் காக்க முன்வந்த நீயே எனது உண்ம்ைத் தோழன், இனி நீ என் தம்பி’ என்று கூறி எழுந்த இளம்வழுதி, உணர்வு மிகுதியோடு அவனை ஆரத்தழுவி நன்றி செலுத்தினான். 'இன்றைக்கு எல்லாமே அதிசயமாக இருக்கிறதே' என்று வாய் பிளந்து நின்றாள் வீரனின் கிழத்தாய். 7. புதுச்சக்தி ஆழ்ந்து உறங்கிய இருள் அசைந்து கொடுத்தது. போல் அமைந்தது அச் சிறு படையின் முன்னேற்றம். அவர்கள் நடையிலே வேகம் இருந்தது; ஆனால் அது ஓசை எதுவும் எழுப்பவில்லை. அவர்கள் உள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/167&oldid=905981" இலிருந்து மீள்விக்கப்பட்டது