பக்கம்:விடிவெள்ளி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 171 'வீரனின் தாய்க்கு இது எதிர்பாராத இடியாகத் தா னிருக்கும்' என்று வழுதி முனங்கினான். பெருமூச் சுயிர்த்தான். அவ்விதம்தான் அது அமைந்தது. - வழுதியும் அவன்துணைவர்களும் வெற்றி மிடுக்கோடு வீடு திரும்புவர் என்று எண்ணியிருந்த கிழவியின் காது கள், சோகச் சுமையால் அழுத்தப் பெற்று தள்ளாடி நடந் தவர்களின் துடிப்பற்ற காலடி ஓசையைத்தான் கிரகித் தன. அவற்றிடையே, அவள் செவிப்புலனுக்கு நன்கு பழகியிருந்த அடி ஓசை எழவில்லை என்பதையும் அலன் உணர்ந்தாள். அவர்கள் வாய் திறப்பதற்கு முன்ன தாகவே அவள் கேட்டுவிட்டாள். வீரன் உங்களோடு திரும்பி வரவில்லையா?” சுவர் ஒரத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கொளி நடுங்கியது. அவள் முகத்தை. அங்கு தெளிந்த உணர்ச்சி త్ప్రడక్షోశ3ళ , எடுத்துக்காட்டுவதற்குப்போதுமான வெளிச் சம் அதில் இல்லை. அவர்களையும் ஒரே கும்பலாய் அது காட்டியதே தவிர, தனித்தனி நபர்களாய் அவள் கண்டு கொள்வதற் கும் சுடரொளி துணை செய்யவில்லை. ஒவ்வொருவரும், அவள் முகத்தைப் பார்க்க விரும்பாதவராய்-பார்க்கும் துணிவு இல்லாதவர்களாய்-தமது முகத்தைத் தாழ்த்திக் கொண்டனர். அங்கு நீடித்த அமைதி பயங்கரமாக இருந்தது. சுடுகாட்டு வெறுமை’யாய் அழுத்தியது. ‘என்ன? என் மகன் வீரனுக்கு என்ன?’ என்று நடுங்கும் குரலில் பதைபதைத்தாள் அம்முதியவள். என் தம்பி வீரன் திரும்பவில்லை. அவன்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/172&oldid=905994" இலிருந்து மீள்விக்கப்பட்டது