பக்கம்:விடிவெள்ளி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 விடிவெள்ளி விம்மலோடு உண்மையை வெளியிடத்துணிந்த இளம் வழுதியின் பேச்சுக்குத் தடை விதிப்பதுபோல் வெடித்தது நற்றாயின் ஊக்க உரை. 'நல்லதாயிற்று. வீரனுக்கு ஏற்ற முடிவாகத்தான் இருக்கும் அது என்றாள் அவள். பிறகு அவள் கண்கள்அசைவற்றுக் கலங்கித் தேங்கிக்கிடக்கும் நீர்க்குட்டைகள் போல் இடுங்கிய குழிகளினுள் ஒளிகுன்றி ஒடுங்கிவிட்ட விழிகள்-அங்குமிங்கும் அலைபாய்ந்தன. நெஞ்சில் வலி உதைப்பதுபோல் தோன்றியது அவளுக்கு கூடுபாய்ந்து எலும்பும் தோலுமான மார்பிலே கை வைத்தாள். "என்னை இந்த வயசு காலத்திலே இப்படித்தனியே விட்டு விட்டுப் போகலாமா வீரா? என்று முணுமுணுத்தாள். கீழே சாய்ந்தான். அதன் பிறகு அவள் அசையவே யில்லை. கிழவியின் முடிவு நெஞ்சுரம் பெற்ற வீர இளைஞர் களையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவர்கள் அவளுக்கு இறுதி பணக்கம் தெரிவித்தனர். "இவ்வாறு உயிர்விட நேர்ந்த அன்னையாரின் நினைவு மீது ஆணை. இனி நாம் வாளாவிருக்க மாட்டோம் வெற்றி, அல்லது சாவு-இரண்டில் ஒன்றைக் கண்டே தீருல்ோம்' என்று வழுதி சூளுரை கூறினான் அதை ஏற்று துனைவர்களும் உறுதி பூண்டார்கள். அவர்கள் அவ்விடம்விட்டு அகன்தபோது, இருளின் வலிமை குறையத் தொடங்கியது. அவர்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி பெற்ற வானத்து விளக்குபோல் விடிவெள்ளி முளைது தனத்து கூரிய கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. புலர்ந்தும் புலராப் புத்தினம்பொழுதில் புதியதோர் சக்தி பெற்றுவிட்டவர்கள்போல் அவர்கள் முன்னே, முன்னே நடந்துசென்றார்கன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/173&oldid=905996" இலிருந்து மீள்விக்கப்பட்டது