பக்கம்:விடிவெள்ளி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ) விடிவெள்ளி எதற்கும் ஏற்பாடு செய்யாமலே சென்றுவிட்டனர். அவர் எங்கெங்கோ சென்று, யார் யாரையோ சந்தித்துப் பேசி முடித்து விட்டு காரி ஊர் திரும்புவதற்குள் மூன்று நாட் கள் ஒடித் தேய்ந்தன. உள நிறைவோடு திரும்பிய அவ ருக்காகக் காத்திருந்த செய்தி அவரைத் திடுக்கிட வைத் தது இருப்பினும் தப்பி ஓடிய இளம்வழுதியை எப்படி பும் பிடித்து விடலாம் சன்ற நம்பிக்கை அவருக்கு இருந் தது. நாட்கள் ஒடஒட அவர் மன உறுதியில் கலக்கம் அவர் அனுப்பிவைத்த வேட்டை நாயும், வீரர்களும் வழுதியைக் கண்டு பிடிக்காமல் வழிதவறிக் கெட்டலை கிறார்களோ என்ற ஐயம் காரிக்கு எழுந்தது வர்ைந்தது அவ்விதம்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற நினைப்பு அடிக்கடி தலை துரக்கியது. வழுதியை அவர்கள் கண்டு, கொன்றிருந்த ல் இதற்குள் அவருக்குச் செய்தி வராமல் போகுமா? பல தினங்களாகியும் அவருடைய ஆட்களில் ஒருவன் கூட வரவில்லையே? திடீரென்று தமது திட்டங்களுக்கு இவ்விதம் இடை யூறு ஏற்படக் காரணம் என்ன என்று எண்ணி எண்ணி மனசைக் குழப்பிக்கொண்டார் மாற காரி. இந்தச் சிறுபயலுக்கு ஏன் இந்தப் பெரிய ஆசை?’ என்று குமைத் தார் அவர், பெரிய ஆசைகளை எல்லாம் வளர்த்து, வெற்றியுடன் உருவாக்கி அனுபவிப்பதற்குத் தமக்கு மட் டுமே உரிமை உண்டு என்று அவர் கருதியதாகவே தமது திட்டங்கள் இவ்விதம் தேக்க நிலை எய்த நேர்ந்ததை எண்ணி காரி வெறியோடு இருந்த ஒரு சமயத் தில்தான் அவர் கவனம் கவரப்பட்டது. குதிரைகள் பூட்டிய அழகிய வண்டி ஒன்று வெளியே வந்து தின்ற் தைக் கவனித்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/175&oldid=905998" இலிருந்து மீள்விக்கப்பட்டது