பக்கம்:விடிவெள்ளி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 175 "ஒருவேனைவரகுணத்தேவர் தான் வந்துவிட்டாதோ' என்று எண்ணம் தெளிந்தது அவர் உள்ளத்தில். மாறன் காசி சந்தித்துவிட்டு வந்தவர்களில் தேவரும் ஒருவர்தான். அவரிடம் இளம்வழுதியைப்பற்றியும் காசி குறிப்பிட்டிருந்தார். அவன் வெறும் வீணன் செயல் திறமற்ற சிறுவன். அவனை நாம் பெரிதாக மதிக்க வேண்டியதில்லை என்று அலட்சியமாக வரகுணர் பேசி விட்டார். சில முக்கிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு காரியைச் சந்திக்க வருவதாகவும் அவர் அறிவித்திருந்தார். 'இப்போழுது அவர் தான் வருகிறார் போலும் என்று ஆர்வத்தோடு எட்டிப் பார்த்த காரி ஆச்சர்யமே கொள்ள நேர்ந்தது. வண்டியிலிருந்து இறங்கி வந்தது வரகுணத் தேவர் அல்ல; மங்கையர்க்கரசிப் பிராட்டியார்தான். அவள் தம்மைத் தேடி அங்கு வருவாள் என்று அவர் எண்ணியதே யில்லை. * எளிமையும் தூய்மையும் உருவாகி வந்ததுபோல் தோன்றிய மங்கையர்க்கரசியைக் கண்டதும் வியப்பு மேலிட்டாலும் பணிவுடன் எழுந்து சென்று வரவேற்று உபசரித்தார் மாறன் காரி, அவன் அவருடைய நலன்களைப்பற்றி விசாரித்த பிறகு உங்கள் உதவியை வேண்டி இளம்வழுதியை இங்கு அனுப்பினேனே? அவன் எங்கே?' என்று கேட்டான். இதுவும் காரி எதிர்பாராததுதான் இளம்வழுதியைத் தேடி இவள் வருவாள் என்து அவர் எண்ணியதில்லை. 'இவள் ஏன் வரவேண்டும்?' என்று அவர் உள்ளம் முனு. முனு ஒத்து. - இளம்வழுதிக்கு மாறன்காரி அளித்த வரவேற்பு முறைபற்றி மங்கையர்க்கரசி எதுவும் அறியாதவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/176&oldid=905999" இலிருந்து மீள்விக்கப்பட்டது