பக்கம்:விடிவெள்ளி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 விடிவெள்ளி போலவே நடத்து கொண்டாள். இங்கே நடந்தது அவ ளுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்றுதான் காரியும் கருதினார். எனவே நெஞ்சாரப் பொய் சொல்லத் துணிந்தார். "இளம்வழுதியா?...ஒ: ஆமாம்...ஒருவன் வந்தான். நீங்கள் அனுப்பியதாகத்தான் சொன்னான்...' "அவனோடுச3த்தன் கணபதியும் வந்தானே? அவனை உங்களுக்கு நன்றாகத் தெரியுமல்லவா? நான் திருமுகமும் வரைந்து கொடுத்திருந்தேன்' என்று பிராட்டி இயல்பாகக் குறிப்பிடுவதுபோல் நினைவுபடுத்தினாள் மாறன் காரி விசாலமான நெற்றியை விரல்களால் த.விக்கொண்டார். தலை அசைத்தார். ஆமாம். நினை விருக்கிறது. அன்று நான் முக்கிய அலுவல்கன் மீது வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன் திரும்பி வருகிற வரை இங்கேயே இரு என்று சொல்லிவிட்டுச் சென்றிருந் தேன். நான் வந்து பார்த்தபோது அவன் இங்கில்லை. அதற்கு நான் என்ன செய்வது?’ என்ற சர். 'வழுதி மீண்டும் மதுரைக்கு வரவில்லை. உங்களிட மிருந்தும் தகவல் இல்லை. அவனுக்கு உதவிபுரிய நீங்கள் முன் வந்திருக்கலாம் என்று நான் எண்ணினேன். என்ன நடக்கிறது என்று அறிந்துபோகவ்ே வந்தேன்’ எனக் கூறினாள் அவன். கசரி அவளைச் சிறிது கூர்ந்து நோக்கினார். அவன் பேரில் உங்களுக்கு ஏன் இவ்வளவு பரிவு என்றே எனக்கு விளங்கவில்லை. அவன் நமது உதவியைப் பெற அருகதை யற்றவன். நன்றி இல்லாதவன் என்று சொன்னார். "ஏன் இவ்விதம் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டாள் அவள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/177&oldid=906001" இலிருந்து மீள்விக்கப்பட்டது