பக்கம்:விடிவெள்ளி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 17 திருந்த ஒலையை எடுத்தான். அதை ஈட்டியில் குத்தி, குறி பார்த்து விட்டெறித்தான். அதனால் பரபரப்பு விளையும் என்பது கூடவா தெரி பாது அவனுக்கு? விரைவில் அங்கிகுந்து தப்பி நகர்ந்து விடும்படி தூண்டியது உள்ளுணர்வு அவன் பெருஞ்சு வர் களின் நிழலோடு நிழலாகப் பம்மி, ஒசையின்றி வேகமாக நடத்தான். மாளிகையின் பின்புறமாகச் சென்றபோது, இரு பெரும் பள்ளங்களிடையே சிறு சந்து ஒன்று தென் பட்டது இருள் மண்டிய அக்குறுகல் வழியினுாடு புகுந்த அவன் ஒரு இடத்தில் சுவரோடு ஒண்டி நின்றான். திடுக்கிட்டான். அந்தச் சுவர் நகர்ந்து விலகுவது போன்த உணர்வு ஏற்பட்டதுதான் அதற்குக் காரணமாகும். அது ஒரு கதவு என்பதும், உள்னே தாழிடப்பெறாமலே அது சும்மா அடைத்து வைக்கப்பட்டிருந்தது என்பதும் உடனடி யாகவே அவனுக்குப் புரிந்துவிட்டது அதனால் தைரியம் அதிகமாயிற்று. அது முகத்திலே முறுவல் பூக்கச் செய்தது. "யார் வீடாக இருந்தால் நமக்கென்ன? தாம் இங்கு குடியிருக்கவா போகிறோம்? கொஞ்ச நேரம் பதுங்கி யிருப்போம். வீ தி யி ல் சந்தடியும் ஆர்ப்பாட்டமும் ஒடுங்கிய உடனே வெளியேறி விடலாம் என்று பேசியது அவ:ன மனம. அவன் அக்கதவைத் திறந்து மெதுவாக உள்ளே புகுந்தான். அது தோட்டத்திற்குள் வழிவிட்டது. அவன் நன்றாகத் தாழிட்டுவிட்டு சுவரோடு ஒட்டி நின்று உற்றுக் கேட்டான் வெளியே இரண்டு மூன்று பேர் நடந்து வருவது போன்ற ஓசை எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் கனத்தது. பின் தேய்ந்து மறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/18&oldid=906007" இலிருந்து மீள்விக்கப்பட்டது