பக்கம்:விடிவெள்ளி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 விடிவெள்ளி துணிந்துதான் கிளம்பி வந்தாள். பலன் ஏற்பட வில்லை. அவரைக் கண்டு பேச வந்திருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் அவளுக்கு இப்போது-வண்டியில் திரும்பிச் செல்கையில்-ஏற்பட்டது. வேக ஒட்டத்தில் சென்ற குதிரை வண்டி 'சடக் கென நிறுத்தப்பட்டது உள்ளே இருந்த மங்கையர்க்கரசியை ஒரு உலுக்கு உலுக்கியது அந்த அதிர்ச்சி என்ன?” என்று கேட்டபடி வெளியே எட்டிப் பார்த்தாள் அவன். பாதையில் ஒரு பெண் நின்று வழி மதித்தாள். அதனால் தான்...” என்று இழுத்தான் வண்டியோட்டி அந்தப் பெண்ணே மங்கைக்கரசியின் பார்வையில் வந்து நின்றாள். அவாைகவே அறிவித்தாள். நான்தான் அமுததல்லி. எனக்கும் உங்கள் வண்டியில் இடம் கொடுங் கள். நான் உங்களோடு மதுரைக்கு வர விரும்புகிறேன். என்றாள். - சாத்தன் சுணபதி மூலம் அமுதவல்லியைப் பற்றியும், அவள் செய்திருந்த உதவியையும் அறிந்திருந்த பிராட்டி மறுதளிக்கவில்லை சீக்கிரம் உள்ளே வந்துவிடு என்று தான் அழிைத்தான். அமுதவல்லி ஏறிக்கொண்டதும் வண்டி மறுபடியும் வேகமாக முன்னேறத் தொடங்கியது. அவள் மாறன் காரியின் உண்மைத் தன்மைகளைக் குறித்தும், இனம் வழுதி தப்பிச் சென்றது பற்றியும் விவரித்தாள். - "இங்கேயே இருந்தால் எனக்கு ஆபத்து ஏற்படும் என்று நிச்சயமாகப்படுகிறது. என் மனசில் தெளிவில் லாத குழப்பமும் அச்சமும் கவிந்துவிட்டன. நீங்கள் வேறு வந்து காரியின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டீர்கள். இளம்வழுதியை யார் தப்பியோடச் செய்தது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/181&oldid=906013" இலிருந்து மீள்விக்கப்பட்டது