பக்கம்:விடிவெள்ளி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 விடிவெள்ளி இனிமையாய், எழிலாய் மலர்ந்து திகழ்ந்தது அம்முகத் தைத் தன் விரல்களால் பற்றி அன்போடு நோக்கினாள் பெரியவள். உனக்கு இளம்வழுதி மீது ஆசைதானே? இதைத் தான் நான் உன்னிடம் கேட்க விரும்பினேன்' என்றாள் அவள் அவள் ஆசை இனிது நிறைவேறி, பொன்மயமான எதிர்காலம் அவ்விருவருக்கும் வாய்க்கட்டும் என்று மனம் குளிர-வாய் நிறைய வாழ்த்துக் கூற வேண்டும் என்று தான் மங்கையர்கரசி நினைத்தாள். ஆனால், அவளும் அமுதவல்லியும் அந்நேரத்தில் திடுக் கிட்டு அலற தேர்ந்தது. இருவரும் உருண்டு விழுந்து மோதிக் கொள்ளும்படியாயிற்று. வண்டிக்காரன் ஐயோ! என்று ஒரு அலறல்தான் கொடுத்தான். அப்புறம் அவ னிடமிருந்து சத்தமே இல்லை. வண்டி உயரத்திலிருந்து தள்ளப்பட்டு, பள்ளத்தில் உருண்டு விழுவதை உள்ளே இருந்த இருவரும் உணர முடிந்தது, 9. வினையின் விளைவுகள் எதிர்பாராத விதத்திலே சில:விபத்துகள் முடிந்துவிடு. கின்றன. தற்செயல் நிகழ்ச்சிகள் சில யாரும் நம்ப முடி யாத வகையில் நடந்து விடுகின்றன. அவை இப்படித்தான் முடிவடையும் - முடிவுற வேண்டும்- என்று எதிர்பார்க் கிறவர்களும், ஆசைப்படுகிறவர்களும் நேர்மாறான நிகழ்வுகளைக் கண்டதும் இவை எப்படி நடந்தன: என்று விளக்க இயலாதவர்களாய் திகைக்க நேரிடுகிறது" அப்பொழுதுதான் தெய்வாதீனமாக நடந்துவிட்டது. விதி அப்படி காலம் செய்கிறது என்பன போன்ற பேச்செல்லாம் பிறக்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/183&oldid=906017" இலிருந்து மீள்விக்கப்பட்டது