பக்கம்:விடிவெள்ளி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 விடிவெள்ளி அங்கேயே நின்றால், தங்கள் தலைக்கே ஆபத்து வந்து விடக்கூடும் என்ற பயம் அவர்களைப் பிடித்துத் தள்ளியது. உயிராசை அவர்கள் கால்களுக்கு பலமும் வேகமும் அளித்தது அவர்கள் ஏற்படுத்திய விபத்து அவர்கள் எதிர்பார்த்த வாறு நிறைவுறவில்லை. வ்ண்டி நிலைகுலைந்து உருளு வதை உணர்ந்ததும் குதிரைகள் முரண்டின; கட்டு விடு பட்டிருந்தால் ஒரு குதிரை தாவி விலகித் தப்பி சமநிலத் தில் தின்றது. அதன் உடல் முழுவதும் நடுங்கிக் கொண் டிருந்தது அதனுடைய அகன்ற கண்களின் கருவிழிகள் பீதியினாலும் குழப்பத்தாலும் சுழன்று, வண்டி விழுந்து கொண்டிருந்த பள்ளத்தின் பக்கமே நிலைத்து விட்டன. மற்றொரு குதிரை, வண்டியின் பாரத்தால் தள்ளப் பட்டு, முன்னோக்கிச் சென்றது. கால் இடறி விழுந்து, முழங்கால்கள் மடங்கவும் குறுக்கே விழுந்த அதன் உடல் வண்டிச் சக்கரங்களைத் தடைப்படுத்தும் சாதனமாக உதவியது. வண்டி குலுங்கி நின்றது. சாய்ந்துபடுத்து விட்டது ஒரு சரிவில். அங்கு தலைதுாக்கி நின்ற சிறுபறை களும் அதைத்தடுத்து நிறுத்தத் துணைபுரிந்தன. அதனால் வண்டி பெரும் பள்ளத்தில் விழுந்து நொறுங்குவது தவிர்க்கப்பட்டு விட்டது. வண்டிக்குள்ளிருந்த இருவரும் சேதமின்றிப் பிழைத்துக் கொண்டார்கள். வண்டி அசைவின்றிக் கிடந்ததும் மங்கையர்க்கரசி சமாளித்துக்கொண்டு வெளியேறுவதற்கு முயற்சி செய் தாள். அமுதவல்லி அதிர்ச்சியினால் நடுங்கிக் கிடந்தாள். அவளைத் தேற்றி, தென்பட்ட் வழியினூடு, வெளியே வந்து வண்டியின் நிலையைப் பார்த்ததும் மங்கையர்க் கரசிக்கே மூர்ச்சை போட்டு விடும் போல் தோன்றியது. அமுதவல்லி அவள் தோள்மீது முகத்தைப் புதைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/185&oldid=906021" இலிருந்து மீள்விக்கப்பட்டது