பக்கம்:விடிவெள்ளி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 185 E கொண்டாள். அவள் உடல் காற்றில் அசையும் இனம் தளிர் போல் நடுங்கியது. தாங்கள் தப்பிப் பிழைத்தது தெய்வாதீனம்தான் என்று இருவருமே நம்பினார்கள். கீழே விழுந்து கிடத்த குதிரை வேதனைப் பெருமூச்சு உயிர்த்துக் கொண்டிருந்தது. அதன் நாசிகளிலிருந்து உலைத்துருத்தியின் காற்றுபோல் மூச்சு சீறி வந்கதி. மேலே தோன்றிக் கிடந்த அதன் உடல் விம்மித் தாழ்ந் ததி பயங்கரமாகத் தானிருந்தது அதன் கண்ணின் கரு மணி ஒரு ஒரத்தில் ஒதுங்கிவிட, வெள்ளைப் பகுதியில் செங்கோடுகள் ஒடுவது பளிச்செனத் தெரியும் வகையில் காட்சி அளித்தது. அதில் தோன்றிய வேதனையும் ஏக்கத் துடிப்பும் பரிதாபத்தை எழுப்பின. தனது பிசியத்திற்குரிய குதிரைகளில் ஒன்றை அவன் பரிவு. ன் நோக்கி நின்றாள். அதன் மரண வேதனையை உணர்ந்த அவளுடைய உள்ளம் கனத்தது, ஆயினும் அவ்வேளையில் அவன் என்ன செய்ய முடியும் அங்கேயே நெடுநேரம் தயங்கி நிற்பது கூடத் தப்பு என எச்சரித்தது. அவள் உள்ளுணர்வு. அமுதவல்லியைத் தாங்கி அணைத்தபடி மெதுவாக, நிதானமாக, அவள் நல்ல இடத்துக்கு வந்து சேர்ந்தாள். வண்டிக்காரன் அடிபட்டுக் கிடந்ததையும் சுழற்றி எறியப் பட்ட அச்சாணியையும் அவள் கண்டான். இது தற் செயலாக நேர்ந்தது அல்ல. திட்டமிட்டுச் செய்த நாச அேலைதான்' என்று அவளுக்கு நிச்சயமாகத் தோன்றி யது. இந்த எண்ணத்தோடு கூடவே இதற்கு மூலகார ணம் மாறன்காரியாகத் தான் இருக்க முடியும்' என்ற உணர்வும் உறுதியாகப் பதிந்தது அவள் உள்ளத்திலே, வண்டிக்காரனுக்கு உயிர் இருக்கிறதோ, இல்லையோ என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது. இனியும் இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/186&oldid=906023" இலிருந்து மீள்விக்கப்பட்டது