பக்கம்:விடிவெள்ளி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ) விடிவெள்ளி தின் றால் நம் உயிர் தமக்கே உரிமை என்று வெகுதேரம் சொந்தம் கொண்டாட முடியாது என்ற எண்ணம் வலுப் பெற்று வந்தது. தொலைவில் எங்கோ மத்தமான முர சொலி விம்மி ஆர்த்து முன்னேறுவது போல் ஒரு ஒசை எழுத்து காற்றோடு கலந்து வந்து அவள் காதுகளில் பட்டது. குதிரைகள் பல வருவதாகத் தோன்றியது. மங்கையர்க்கரசியின் மனதில் சிறு பதைப்பு படர்ந் தது. இங்கிருந்து எங்கே போய் மறைந்து கொள்வது, எப்படிப் போவது என்று புரியாது அவள் கலவரத்தோடு முதலில் தப்பிவிட்ட குதிரை மகிழ்வுடன் கனைத்து அவள் அருகில் வந்து நின்றது. அதன் உடலில் இன்னும் சிறிது சிலிர்ப்பு இருந்தது. அவள் அதைத் தட்டிக் கொடுத்தாள். அன்டோடும் களிப்போடும் அதன் முகத்தை நோக்கினாள். 'அமுதம்! தெய்வத் திருவருள் நம் டங்கிலே தான் இருக்கிறது. இது ஒவ்வொரு கட்டத் திலும் நமக்கு நிரூபணமாகி வருகிறது நம்மைச் சாக விட மல் காப்பாற்றிய திருவருள் நமக்குத் துணையாக இந்தக் குதிரையையும் காப்பாற்றி நிறுத்தியிருக்கிறது? என்றாள். மேலும் காலம் தாழ்த்தாமல் அமுதவல்லி யைக் குதிரைமீது ஏற்றி விட்டுத் தானும் அமர்ந்தாள். கதிரையைச் செலுத்தும் பயிற்சியிலும் அவள் தேர்ந் திருந்ததால், மங்கையர்க்கரசிக்கு எந்த விதச் சிரமமும் இல்லை, பொங்கி வரும் பேராசையை எதிர்த்துச் செல் வது அறிவுடைமை ஆகாது என எண்ணி அவள் மரங்கள் தெருக்கமாக வளர்ந்து நின்ற பகுதிகளுக்குள் புகுந்து மதுரை நோக்கிப் பயணமானாள். . மாறன்காசியின் ஆட்களும், பிறகு மங்கையர்க்கரசியும் செவிமடுத்த ஒலி காற்றிலே மிதந்து வந்த வெற்றோசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/187&oldid=906024" இலிருந்து மீள்விக்கப்பட்டது