பக்கம்:விடிவெள்ளி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 விடிவெள்ளி நிகழ்ந்த இரவிலே மறைந்து நின்று ஈட்டி எறிந்திருக் கின்றான் என்று தேவர் கூறியதை அவன் நம்பினான். மாறன் காரியைப் பிடித்து வரும்படி ஏவினான். அவன் அனுப்பிய வீரர்கள்தான் காரிக்குச் சாவோலை எடுத்துச் சென்றார்கள். மங்கையர்க்கரசியின் குதிரை வண்டி சிதைந்து கி.ந்த இடத்தை நெருங்கியதும் அவர்கள் சற்றே நின்று நிதானித் தர்கள். அவர்களுடைய கண்ணோட்டம் விபத்தின் வினைவை விழுங்கியது. கொள்ளைக்காரர்கள் எவரோ செய்த வேலை என்றுதான் அவர்கள் கருதினர். நாட்டிலே எது வேண்டுமாயினும் நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன ஆகவே அதுபற்றி வீணாக எண் னி திற்காமல் அவர்கள் தங்கள் க்ருமமே கண்ணாக முன் சென்றனர். - வரகுணத் தேவர் வருகையை எதிர்நோக்கியிருந்த மாறன்காரி முன்னிலே, அவர் எதிர்பாராத வேளையில் வந்து நின்றார்கள் களப்பிரர்கள். நீங்கள் யார்? தேவர் வரவில்லையா? என்று கேட்டர் காரி. 'நீ எங்கள் அடிமை. கேள்வி கேட்பதற்கு உனக்கு உரிமை இல்லை' என்று அதட்டினான் களப்பிரர்களின் ళ్లఖౌ}ఢఖళఃళ , 'திறந்த வீட்டினுள் புகுந்த தாய் பலமாகக் கத்த & § 》 - 令 f - سعي. نتة اي வேறு செய்கிறதே! என்றார் அவர் அலட்சியமாக. 'ஏய், வாயை மூடிக்கொண்டு எங்களோடு வா' என உத்திரவிட்டான் வீரன். то .# பண்பற்ற பதரே, வெளியே போ! எனப்பாய்ந் - بمسمي தெழுந்தார் காரி. அவரது இரும்புக்கரம் களப்பிரனின் முகத்தைப் பதம் பார்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/189&oldid=906028" இலிருந்து மீள்விக்கப்பட்டது