பக்கம்:விடிவெள்ளி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 189 வலி பொற:தவனாய் அவன் ஊளையிட் டான். இந்த மாடனை கவனியுங்கள். செம்மையாகக் கொடுங்கள். என்தான். அநேகர் மாறன் காரி மீது சாடினர். அவர் தணிகை யில் போராடினார். வெறும் கையராய் காரி பல பேரை எதிர்த்து நிற்பது எப்படி? விரைவிலேயே விழுந்து விட் டார். அவர் உடலை மிதித்துத் துவைத்தபடி வெறியர்கள் அவ்வீட்டினுள் புகுந்து சூறையாடி வெற்றி கொண்டாடு வதில் ஈடுபட்டார்கள். வஞ்சக நினைப்போடு வினைகள் விதைத்து அதத் குரிய பலனை அறுவடை செய்து மாறன்காரி மண்ணில் விழுந்த வேளையிலே, மங்கையர்க்கரசியும் அமுதவல்லி யும் மதுரை மாநகர் சேர்ந்தார்கள். அந்நகரம் பரபரப்பில் ஆழ்ந்து உயிரியக்கம் பெற்றுவிளங்குவதைக் கண்டு திகைத் தார்கள். - எங்கும் பாண்டியர் பட்ை தென்னவர் வருகிறார் கள் என்ற பேச்சு, ப்டை வந்து விட்டது: இளம்வழுதி வந்து விட்டான்' என்ற ஆரவார உவகை நாவலோ நாவல்!” எனும் உற்சாகக் கூவல், அமுதவல்லியின் உள்ளம் மகிழ்ச்சியால் துடித்தது. அவன் உடலில் ஒர் புத்துணர்வு ஓடிக் கிளுகிளுத்தது. அவள் கண்கள் வண்டுகள் போல் நெடுகிலும் தாவித் திரிந்தன. - மங்கையர்க்கரசியும் ஆனந்தம் கொண்டாள் அல ளுடைய மகிழ்ச்சி குதிரையின் துரித ஓட்டத்தை மேலும் அதிகமாகும்படி தூண்டியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/190&oldid=906032" இலிருந்து மீள்விக்கப்பட்டது