பக்கம்:விடிவெள்ளி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண் ண ன் 口 盟姆置 தவிர, போரிடுவதில் தீரமுடையவர்கள் அல்ல என்பதை வெள்ளம்போல் திரண்டுவந்த தமிழர் கூட்டத்தின் முன் நிரூபித்துவிட்டார்கள். இளம்வழுதி பெரும்படையுடன் புகுந்துவிட்டான் என்று கேள்விப்பட்டதுமே ஒடி ஒளிந்தவர்கள் பலர். செய்வது என்ன என்று தெரியாது. திகைத்து எவிகள் போல் அங்குமிங்கும் ஒடியவர் அனேகர். தக்க தருணத்தை எதிர்நோக்கிச் சித்தமாக இருந்த அடியார்க்கு நல்லானும், அவன் திருக்கூட்டமும் அகப்பட்ட களப்பிரர்களை எல்லாம் பிடித்துக் கழுவேற்றிக் களிப்படைந்தார்கள். வைகை நதியில் ஒடிய தண்ணிர் செந்நீராக மாறி யிருந்தது. கூற்றன் நாயனாரும் அவனைச்சேர்ந்தவர்களும் வழுதி யின் வீரர்களால் கொல்லப்பட்டனர். வீர மறவர்கள் வெற்றி ஆரவாரத்தோடு நகர வீதிகளில் திரியும் போது, மூடு திரையிட்ட வண்டி ஒன்று வேகமாக நகர எல்லை யைக் கடந்து ஒ. முயன்றதைக் கண்டார்கள். வழி மறித்து, திரையைக் கிழித்தார்கள். வண்டிக்குள் ஒரு மூலையோடு ஒண்டி நடுங்கியவாறு காட்சியளித்தார் வரகுணத்தேவர். தப்பிப் பிழைக்கும் நோக்குடன் அவர் திரையிட்ட வண்டியில்-பெண்கள் பிரயாணம் போவதுபோல்-அமர்ந்து கிளம்பியிருந்தார். அவரோடு அவர் மகன் திலகவதியும் இருந்தாள். அவள் முகத்தில் குழப்பமே பீதியோ படிந்திருக்கவில்லை. அந்த வண்டியை மடக்கியவர்களிடையே தேவரை நன்கறிந்தவன் ஒருவன் இருத்தான். இந்தக் குள்ள நரியைச் சும்மாவிடக் கூடாது. சித்திரவதை செய்ய வேண்டும்!' என்று அவன் கத்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/192&oldid=906036" இலிருந்து மீள்விக்கப்பட்டது