பக்கம்:விடிவெள்ளி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 193 "நீங்கள் என்ன செய்வீர்களோ என்ற அச்சம் என் தந்தைக்கு அதனாலேயே திப்பி ஓட முயன்றார், பிடி பட்டுக் கொண்டதும் பகம் அதிகரித்து விட்டது...' "அவர் துரோகம் செய்யாது இனிமேல் தல்லவராக நடந்து கொள்வேன் என்று உறுதி கூறியிருந்தால் நானோ என்னைச் சார்ந்தவர்களோ அவருக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திருக்க காட்டோம்" என்று வழுதி கூறினான். திலகம் பெருமூச்செறிந்தாள். பிறர் மணகை யார் தான் புரிந்து கொள்கிறார்கள்? அவர் உங்களை எண் ணி அஞ்சினார். கழுவில் சிக்க நேருமோ என்ற பீதி அவருக்கு. சித்ரவதைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற கருத்தோடு அவர் சதா தம்மோடு நஞ்சு வைத்திருப்பது வழக்கம்...' அதைத் தின்தா அவர் இறந்தார்?" என்று வழுதி துடிப்போடு கேட்டான். 'ஊம் எனத் தலையசைத்தாள் அவன். "தாயே! நீங்களாவது சொல்லியிருக்கக் கூடாதா? என் உயிரை எனக்கு இருமுறைகள் மீட்டுத் தந்த உங்க ளுக்காக நான் உங்கள் தந்தையை ஒன்றும் செய்யாமல் விட்டிருக்க மாட்டேனா? என்று உணர்ச்சியோடு பேசி னான் அவன். . அவள் கண்கள் நீரில் நீந்தின. துயர் மூச்செறிந்தான் திலகம். அது தன் தந்தையின் முடிவுக்காக அல்ல என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அம்மா!' என்று அழைத்தான் வழுதி. அவள் திடுக்கிட்டு அவனை நோக்கினாள். அவள் விழிகளில் ஒரு ஏக்கம் நிறைந்து நின்றது. நீங்கள் என்னை ஏன் இப்படி வதைக்கிறீர்கள்' என்று முனங்கினாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/194&oldid=906040" இலிருந்து மீள்விக்கப்பட்டது