பக்கம்:விடிவெள்ளி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ! ) விடி வெள்ளி என்ன கருத்தில் அவள் அப்படிச் சொன்னாள் என்பதைப் புரிய இயலாதவனாய் விழித்தான் வழுதி. ஏன் என்னை அம்மா என்றும் தாய் என்றும் அழைக் கிறீர்கள்! என்று குறை ஒலிக்கும் குரலில் மொழிந்தாள் திலகம். வேறு விதத்தில் நான் உங்கள் உள்ளத்தைத் தொடவில்லையா? என் உள்ளத்தை நீங்கள் உணர்ந்து கெ: ஸ்ளவே இல்லையா?" இளம்வழுதி வியப்புற்றான் ஒரு கணம் சாத்தின் ஒரு சந்தர்ப்பத்தில் இவளைப் பற்றிக் குறிப்பிட்டது அவன் நினைவில் மின் வெட்டியது. அதுதான் உண்மை போலும். திலகவதி அவனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாளா? அவள் விழிகள் ஆழத்திலே அவள் உள்ளத் தில் கருத்தைத் தேட முயன்றன. அவன் கண்கள். - 'அம்மா, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்து பேச்செடுத்தான் அவன். அவள் முகம் ஏமாற்றத்தாலும் துயரத்தினாலும் வ8:து, ன்ை உள்ளத்தில் ஒருத்தி இடம் பெற்று விட்டாள். அவளிடம் சென்று விட்ட என் மனசை நான் மீட்டுக் கொள்ள இயலாது. அவள் இல்லாமல் என் வாழ்வு திறைவு பெறாது என்ற நம்பிக்கை எனக்கு என்றோ ஏற்பட்டு விட்டது...' எனக்கும் அப்படித்தான். உங்களைக் கண். நாளி விருந்தே தான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் இல்லா மல் என் வாழ்வு வெறுமையாய், வீணானதாய் தான் இருக்கும் என் ஆசை கனவாய் முடியும் என்பதையும் நான் உணர்ந்துதான் இருந்தேன். உங்கள்மீது எனக்குக் கோபம் கிடையாது. என்னை மன்னித்து விடுங்கள், அன்பே என்று கூறினாள். முகத்தை கையால்துடைப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/195&oldid=906042" இலிருந்து மீள்விக்கப்பட்டது